SuperTopAds

அந்தமானின் 3 சிறு தீவு பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

ஆசிரியர் - Admin
அந்தமானின் 3 சிறு தீவு பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் உள்ள 3 சிறிய தீவுகளின் பெயர்களை மாற்ற செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை அந்தமான் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த புதிய பெயரை அந்தமான் தீவுகளுக்கு சூட்டுவார் என தெரிகிறது.

அந்தமான் நிகோபர் தீவுகளில் உள்ள ரோஸ் தீவு, நீல் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவு ஆகிவை பெயர்மாற்றம் செய்யப்படவுள்ளன. ரோஸ் தீவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு எனவும், நீல் தீவு சாஹேத் தீப் தீவு என்றும், ஹேவ்லாக் தீவு சுவராஜ் தீவு எனவும் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இரண்டாம் உலகப்போரின் போது அந்தமான் தீவை ஜப்பான் கைப்பற்றி அதன்பின் மீண்டும் ஆங்கிலேயர்கள் வசம் வந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து அந்தமான் விடுவிக்கப்பட்டதாக பிரகடனம் செய்து நேதாஜி சந்திரபோஷ் கடந்த 1943-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி போர்ட் பிளையரில் தேசியக் கொடி ஏற்றினார்.

அப்போது அந்தமான் நிகோபர் தீவுகளை சாஹேத் மற்றும் சுவராஜ் தீவுகளாக பெயர் சூட்டப்பட வேண்டும் என்று நேதாஜி விரும்பினார். இதுகுறித்து நேதாஜியின் உறவினரும், மேற்கு வங்க பாஜக துணைத் தலைவருமான சந்திரகுமார் போஸ், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளார்.

இந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது… 75-வது சுதந்திரனத்தை கொண்டாடும் இந்த வேளையில் அந்தமான் தீவுகளுக்கு சுபாஷ் சந்திரபோஸ் பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அவரது கோரிக்கையின் படி வரும் ஞாயிற்றுக்கிழமை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் போர்ட்பிளையர் செல்லும் பிரதமர் மோடி, அந்தமான் தீவுகளின் பெயரை மாற்றுவார் என தெரிகிறது.

கடந்த 1943-ம் ஆண்டு நேதாஜி கொடியேற்றிய அதே ஜிம்கானா மைதானத்தில் 150 மீட்டர் கம்பத்தில் தேசிய கொடியேற்றி வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார். அப்போது நடைபெறும் நிகழ்ச்சியில் தீவுகளின் பெயர்மாற்றம் குறித்த அறிவிப்பையும் பிரதமர் மோடி வெளியிடுகின்றார்.