கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உலங்குவானுாா்திகள் இப்போதும் தயாா் நிலையில்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உலங்குவானுாா்திகள் இப்போதும் தயாா் நிலையில்..

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்குண்டவா்களை மீட்பதற்கா க இலங்கை விமானப்படையின் உலங்குவானுாா்திகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக விமானப்படையினா் கூறியுள்ளா். 

இலங்கை விமானப் ப​டைக்குச் சொந்தமான 212ரக ஹெலிக்கொப்டர்கள் மற்றும் வை12 ரக வானுர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என விமானப்படை அறிவித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த அடைமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வடக்கின் 5 மாவட்டங்களிலும் 13 ஆயிரத்து 466 குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்து 959 பேர் பாதிப்படைந்துள்ளனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் நீரால் நிரம்பியுள்ளன. இதையடுத்து குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கையில் இரணுவத்தினரும் இளைஞர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், வெள்ளத்தில் சிக்குண்டவர்களை மீட்க்கும் பணிகளில், இலங்கை விமானப் ப​டைக்குச் சொந்தமான 212ரக ஹெலிக்கொப்டர்கள் மற்றும் 

வை12 ரக வானுர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என விமானப்படை அறிவித்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு