2017 ஐ மாஸ் வருடமாக்கிய விஜய் ரசிகர்கள்! குவியும் வாழ்த்துக்கள்

ஆசிரியர் - Admin
2017 ஐ மாஸ் வருடமாக்கிய விஜய் ரசிகர்கள்! குவியும் வாழ்த்துக்கள்

விஜய்க்கு அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை விஜய் தளபதி தான். அவரின் படங்கள் வந்தால் கொண்டாடுவார்கள். சமூக வலைதளங்களில் தங்கள் வித்தையை காட்டும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 2017 ஜனவரியில் பைரவா படம் வெளியான சமயம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் காரணமாக ஒரு 6 நாட்களுக்கு படம் பற்றிய எந்த செய்தியையும் வெளியிடப்போவதில்லை என முடிவெடுத்தார்கள். அதை அப்படியே பின்பற்றினார்கள்.

சென்னை மெரீனாவில் நடந்த போராட்டத்திற்கு விஜய் முகத்தை பாதி மறைத்த படி இரவில் வந்து தனது ஆதரவை கொடுத்துவிட்டு சென்றது நினைவிற்கு வரும் தானே.

பழநியில் கடந்த வாரம் கோவை மாவட்ட ரசிகர்கள் மன்ற தலைவர் முன்னிலையில் அலகு குத்தி, காவடி எடுத்து, கிரிவலம் வந்து, விஜய் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

விஜய்யின் 25 வருட சினிமா பயணத்தை ஒட்டி டிசம்பர் 04 ல் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அன்னதானம் வழங்கி வழிபாடு நடத்தி கொண்டாடியுள்ளார்கள்.

அதே போல சமீபத்தில் சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் அவரின் புகைப்படம் இடம் பெற்றதை மிகவும் கொண்டாடினார்கள்.

Radio
×