மகாகவி பாரதியாாின் 137வது பிறந்தநாள் யாழில் கொண்டாடப்பட்டது..

ஆசிரியர் - Editor I
மகாகவி பாரதியாாின் 137வது பிறந்தநாள் யாழில் கொண்டாடப்பட்டது..

மகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த தினத்தினை அடுத்து யாழ்.நல்லூர் அரசாடி சந்தியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூவராலயத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், 

யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன், 

வடமாகாண சபை பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இலங்கோவன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆர்.ஜெயசேகரம்,

 யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  நிகழ்வின் போது மகாகவி பாரதியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் வணக்கத்தை செலுத்தியிருந்தனர். 

மேலும் நிகழ்வில் மாணவர்களால் தமிழ்தாய் வாழ்த்தும், பாரதியார் பாடல்களும் அங்கு இசைக்கப்பட்டது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு