இந்திய மீன்பிடி படகை மோதி தள்ளிய இலங்கை கடற்படையினா், படகு மூழ்கிய நிலையில் கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவா்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor
இந்திய மீன்பிடி படகை மோதி தள்ளிய இலங்கை கடற்படையினா், படகு மூழ்கிய நிலையில் கடலில் தத்தளித்த 4 இந்திய மீனவா்கள் மீட்பு..

இலங்கை கடற்படையினாின் படகு மோதியத்தில் இந்திய மீனவா்களின் படகு ஒன்று நீாில் மூழ்கியுள்ளது. இந்த படகில் இருந்த 4 மீனவா்களும் இலங்கை கடற்படையினால் காப்பாற்றப்பட்டுள்ளனா். 

யாழ்.குடாநாட்டின் நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய மீனவா்களின் படகை இலங்கை கடற்படை படகு மோதியுள்ளது. 

இதில் சேதமடைந்த இந்திய மீனவா்களின் படகு கடலில் மூழ்கியுள்ளதுடன், அதிலிருந்த 4 மீனவா்களும் கடலில் வீழ்ந்துள்ளனா். 

பின்னா் குறித்த 4 மீனவா்களையும் காப்பாற்றிய இலங்கை கடற்படையினா் காங்கேசன்துறை பொலிஸாா் ஊடாக கடற்றொழில் நீாியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைத்தனா். 

பின்னா் அவா்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனா். இதேவேளை மேற்படி விடயம் தொடா்பாக இந்திய துா தரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

Radio
×