SuperTopAds

முல்லைத்தீவு மட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட சட்டத்தரணிகள் முன்வந்தனர்..

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட சட்டத்தரணிகள் முன்வந்தனர்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அபகரிப்புக்கள், திட்டமிட்ட பௌத்தமயமாக்கல் மற்றும் அரச திணைக்கள், இராணுவத்தின் நில அபகரிப்புக்களுக்கு எதிராக இலவசமாக சட்ட உதவிகளை வழங்க முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் முன்வந்துள்ளதுடன், மேற்படி அபகரிப்புக்களால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து தெளிவுபடுத்தலையும் வழங்கியுள்ளது.

ஆக்கிரமிப்புக்களுக்கு எதிரான சட்ட உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் முல்லைத்தீவு- கள்ளப்பாடு பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் நாயாறு நீராவியடி ஏற்றம் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரினால் பாதிக்கப் பட்ட மக்கள்,  சிங்கள மீனவர்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள், குருந்தூர் மலையில்

பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கப்பட்டமைக்கு எதிராக போராடிய மக்கள், கரைவலைப் பாடுகள் சிங்கள மீனவர்களுக்கு வழங்கப்பட்டமையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள், மகாவலி எல் வலயத்தினால் காணிகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள், வட்டுவாகல் கோட்டாபாய க டற்படை முகாமினால் காணிகளை இழந்த மக்கள், கேப்பாபிலவு இராணுவ முகாமால் காணிக

ளை இழந்த மக்கள் மற்றும் நந்திக்கடல், நாயாறு ஆகியவற்றை இயற்கை ஒதுக்கிடமாக அ றிவித்தமையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டிருந்தன ர். இதன்போது முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது

 மேற்படி பாதிக்கப்பட்ட மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தினர். இதன்போது அதற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆலோசனைகளை வழங்கியதுடன், பொருளாதார பலம் இல்லாத பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த சந்தர்ப்பத்திலும் இலவசமாக சட்ட உதவி

யை பெற்றுக் கொடுக்க தாம் தயாராக உள்ளதாகவும் உறுதியளித்துள்ளனர். இது குறித்து மு ன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது போருக்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ள து. இதற்கு எதிராக அரசியல் ரீதியாகவும், மக்கள் ஒன்றிணைந்து ஜனநயாகரீதியாகவும் பல்வேறு

 போராட்டங்கள், மற்றும் அழுத்தங்களை கொடுத்தபோதும் இதுவரை சொல்லிக் கொள் ளும் அளவுக்கு முன்னேற்றகரமாக ஒன்றும் நடக்கவில்லை. இந்நிலையில் சட்டரீதியாக எமது மக்களுடைய பிரச்சினைகளுக்கு எதிராக போராடுவதற்கான வழியாகவே சட்டத்தரணிகள் சங் கத்தினருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான இந்த சந்திப்பு அமைந்திருக்கின்றது.

ஏற்கனவே எமது மக்களுடைய ஒரு சில பிரச்சினைகளுக்கு எதிராக நாங்கள் எடுத்திருந்த சட் டரீதியான முயற்சிகள் எம்மை திருப்திப்படுத்த கூடியதாக உள்ளமையால் எதிர்காலத்தில் சட் டரீதியாக எம்மையும், எம் இருப்பையும் பாதுகாப்பதற்கான ஒரு அமைப்பாக முல்லைத்தீவு ம hவட்ட சட்டத்தரணிகளும், மக்களும் இணைந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையை இந்த கலந்துரையாடல் உண்டாக்கியுள்ளது என்றார்.