விஜய் பிடிக்குமா இல்லை அரவிந்த சாமி பிடிக்குமா?- தெறி நைனிகா புதிய பதில்
விஜய்யின் வெற்றி படமான தெறி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாவின் மகள் நைனிகா.
அப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். தற்போது இவர் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்தில் அரவிந்த் சாமி, அமலாபாலுடன் நடித்துள்ளார்.
ஒரு பேட்டியில் நைனிகாவிடம் விஜய் மிகவும் பிடிக்குமா இல்லை அரவிந்த் சாமி பிடிக்குமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனக்கு இருவரையும் பிடிக்கும். விஜய் அங்கிள் ரொம்ப ஸ்வீட், அரவிந்த் சாமி அங்கிலும் அப்படி தான் என்று கூறியுள்ளார்.