இன்றைய நாள் எப்படி 03/11/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 03/11/2018

இன்று

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 17ம் தேதி, ஸபர் 24ம் தேதி,
3.11.18 சனிக்கிழமை தேய்பிறை, ஏகாதசி திதி இரவு 3:09 வரை;
அதன்பின் துவாதசி திதி, பூரம் நட்சத்திரம் இரவு 11:12 வரை;
அதன்பின் உத்திரம் நட்சத்திரம், சித்த–மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : அவிட்டம்,சதயம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு.

மேஷம் : சில நிகழ்வு மனதில் பாதிப்பு ஏற்படுத்தலாம்.தொழிலில் முன்னேற்றம் அளவுடன் இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் குளறுபடி வராமல் கவனம் கொள்ளவும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

ரிஷபம் : எதார்த்த பேச்சு பிறர் மனதை சங்கடப்படுத்தலாம்.தொழில் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும்.நிதானம் தேவை. கூடுதல் மூலதனம் தேவைப்படும்.வெளியூர் பயணம் பயன் அறிந்து செல்லலாம். பெண்களுக்கு குடும்ப செலவில் கவனம் தேவை.

மிதுனம் : மனதில் இருந்த தயக்கம் விலகி தைரியம் உருவாகும்.தொழில் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்.பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவர்.

கடகம்: சிலரது தற்பெருமை பேச்சால் மனதில் தர்மசங்கடம் உருவாக்கும். சொந்தப் பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். நிலுவைப் பணம் கூடுதல் முயற்சியால் பெறுவீர்கள். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

சிம்மம் : தெய்வ நம்பிக்கையுடன் பணிபுரிவீர்கள்.நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.தொழிலில் வியத்தகு முன்னேற்றம் ஏற்படும்.ஆதாய பணவரவு கிடைக்கும்.விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கன்னி: நண்பர் உறவினர்களிடம் வெளிப்படையாக பேசுவதில் தயக்கம் கொள்வீர்கள்.தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணவரவு சீராகும். குடும்ப செலவு அதிகரிக்கும். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

துலாம்: எதிர்மறை குணம் உள்ளவர்களின் விமர்சனம் குறையும்.தொழில் வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றம் செய்வீர்கள்.லாப விகிதம் அதிகரிக்கும்.விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

விருச்சிகம்: மனச்சாட்சிக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள்.திட்டமிட்ட பணிகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்.உபரி பணவரவு கிடைக்கும்.நண்பர்களுக்கு உதவுவீர்கள்.

தனுசு: அளவுடன் பேசுவதால் சுயகவுரவம் பாதுகாக்கலாம்.தொழிலில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.முக்கிய செலவுகளுக்கான பணவரவு கிடைக்கும்.பிள்ளைகளை வழிநடத்துவதில் இதமான அணுகுமுறை நல்லது.

மகரம் : புதிதாக உருவாகிற பணியை தாமதமின்றி நிறைவேற்றுவது நல்லது.தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். குடும்ப செலவில் சிக்கனம் பின்பற்றுவீர்கள்.வீடு வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

கும்பம் : மனதில் நல்ல சிந்தனை அதிகரிக்கும்.தன்னை சார்ந்தவர்களுக்கு இயன்ற உதவி புரிவீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை சீராகும்.திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும்.குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.

மீனம் : நல்லவர் மனதில் இடம் பெறுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும்.வெகுநாள் வாங்க நினைத்த வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி வளரும்.

Ads
Radio
×