இன்றைய நாள் எப்படி 02/11/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 02/11/2018

இன்று

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 16ம் தேதி, ஸபர் 23ம் தேதி,
2.11.18 வெள்ளிக்கிழமை தேய்பிறை, நவமி திதி காலை 7:31 வரை;
அதன்பின் தசமி திதி இரவு 3:44 வரை; அதன் பின் ஏகாதசி, மகம் நட்சத்திரம் இரவு 12:35 வரை
அதன்பின் பூரம் நட்சத்திரம், மரண–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.

மேஷம் : எதிர்கால நலனில் அக்கறை கொள்வீர்கள்.செயல்களில் முன்யோசனை அவசியம். தொழிலில் லாபமடைய கூடுதல் கால அவகாசம் தேவை. விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது. பெண்கள் நகை இரவல் கொடுக்க வேண்டாம்.

ரிஷபம் : எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம்.தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாத்திடுவீர்கள்.அளவான பணவரவு கிடைக்கும்.பயன்தராத பொருள் வாங்க வேண்டாம்.சீரான ஓய்வு உடல்நலம் பாதுகாக்க உதவும்.

மிதுனம் : தன்னை சார்ந்தவர்களின் சிரமம் உணர்ந்து உதவுவீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை இலக்கு நிறைவேறும்.உபரி பணவரவு கிடைக்கும்.வெகுநாள் வாங்க நினைத்த வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.

கடகம் : குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம். தொழிலில் உள்ள இடையூறுகளை சரிசெய்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிறர் பொருட்களை பாதுகாக்கும் பொறுப்பு ஏற்க வேண்டாம்.

சிம்மம் : பகைவரால் உருவான இடையூறு இஷ்ட தெய்வத்தால் விலகும்.தொழில் வியாபாரம் வியத்தகு முன்னேற்றம் பெறும்.பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும்.உத்தியோகஸ்தர் நிர்வாக நடைமுறை சிறக்க நல்ல கருத்து சொல்வீர்கள்.

கன்னி: நல்லது செய்தாலும் சிலர் குறை சொல்வர்.சொந்த பணியில் கவனம் கொள்வது நல்லது.தொழில் வியாபாரத்தில் கூடுதல் முயற்சியினால் அனுகூலம் பெறுவீர்கள்.வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பெண்கள் வீண்பேச்சு பேச வேண்டாம்.

துலாம்: மனதில் கலை ரசனை அதிகரிக்கும்.பணிகளை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும்.ஆதாய பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் பதவி பெறுவர். மாணவர் படிப்பில் முன்னேறுவர்.

விருச்சிகம்: முன்யோசனையுடன் செயல்படுவீர்கள்.வெகுநாள் திட்டமிட்ட பணி குறித்த காலத்தில் நிறைவேறும்.தொழில் வியாபார நடைமுறை திருப்திகரமாகும்.பணவரவும் நன்மையும் அதிகரிக்கும்.நண்பருடன் விருந்தில் பங்கேற்பீர்கள்.

தனுசு: கவனக்குறைவால் பணிகளில் குளறுபடி ஏற்படலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும்.குடும்ப செலவு அதிகரிக்கும்.ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம், மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.

மகரம் : மனதில் சஞ்சலம் தோன்றி விலகும்.தொழில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும்.அத்தியாவசிய செலவுக்கு சேமிப்பு பணம் பயன்படும். நண்பர் வாங்கும் பொருளுக்கு நீங்கள் பேரம் பேச வேண்டாம்.உடல்நலம் ஆரோக்கியம் பெறும்.

கும்பம் : மனதில் நிம்மதியும் பெருமிதமும் ஏற்படும்.தொழில் வியாபாரம் வளர்ச்சியால் புதிய வாய்ப்பு உருவாகும். அதிக பணவரவு பெறுவீர்கள்.குடும்ப பிரச்சினையில் சுமூக தீர்வு கிடைக்கும்.பெண்கள் குடும்ப வளர்ச்சிக்கு உதவுவர்.

மீனம் : நண்பரின் உதவியால் நன்மை பெறுவீர்கள்.செயல்களில் உத்வேகம் பிறக்கும்.தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்.தாராளமாக பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

Radio
×