இன்றைய நாள் எப்படி 31/10/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 31/10/2018

இன்று!

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 14ம் தேதி, ஸபர் 21ம் தேதி,
31.10.18 புதன்கிழமை, தேய்பிறை, சப்தமி திதி மதியம் 12:10 வரை;
அதன் பின் அஷ்டமி திதி, பூசம் நட்சத்திரம் இரவு 3:47 வரை;
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூராடம்
பொது :முகூர்த்தநாள், பைரவர், துர்க்கை வழிபாடு.

மேஷம்: உங்களை சிலர் குறை சொல்ல காத்திருப்பர். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.

ரிஷபம்: நல்லோரின் நட்பை பெற்று மகிழ்வீர்கள். எதிர்காலத் திட்டம் குறித்து ஆலோசிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறையும். பணவரவு அதிகரிக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மிதுனம்: பணிகளில் தடைகள் குறுக்கிடலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் செலவுக்கு பணமின்றி தவிப்பர். உடல்நலனில் கவனம் தேவை.

கடகம்: எந்த விஷயத்தையும் சவாலாக அணுகுவீர்கள். கடந்த காலத்தில் திகைப்பு தந்த பணி எளிதாக நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்தியளிக்கும். பணியாளர்கள் பாராட்டு வெகுமதி பெறுவர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்: குடும்ப சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். கஷ்ட சூழ்நிலை மெல்ல மெல்ல சரியாகும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தை பாதுகாக்கவும். சுமாரான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

கன்னி: செயல்களில் தைரியம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். லாபம் உயரும். கடனில் ஒருபகுதியைச் செலுத்துவீர்கள். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் வழிபாட்டில் ஈடுபடுவர்.

துலாம்: உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி பாராட்டுவர்.தொழில் வியாபாரம் செழிக்க அதிக நேரம் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருள் வாங்குவீர்கள். பெண்களால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

விருச்சிகம்: உங்களின் நற்செயலைச் சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பணி நிறைவேற தாமதமாகலாம். மிதமான பணவரவு கிடைக்கும். எவருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதி தர வேண்டாம். உடல்நிலை சீராக இருக்கும்.

தனுசு: இடையூறு செய்பவரை அறிந்து விலகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சிறு அளவில் போட்டி இருக்கும். வருமானம் சராசரி அளவில் இருக்கும். அரசு வகையில் அனுகூலம் பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். பெண்களுக்கு தாய்வழியில் உதவி கிடைக்கும்.

மகரம்: பேச்சு, செயலில் விவேகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி காண்பீர்கள். லாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தில், சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நற்செயல் கண்டு மகிழ்வர். ஆடை, ஆபரணம் சேரும்.

கும்பம்: பேச்சில் அன்பும், பண்பும் மிகுந்திருக்கும். நண்பர், உறவினர் உங்களை மதிப்புடன் நடத்துவர். தொழில், வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன், பொருள் சேரும்.

மீனம்: செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். உறவினரால் செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.

Radio
×