SuperTopAds

இன்றைய நாள் எப்படி 19/10/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 19/10/2018

இன்று!

விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 2ம் தேதி, ஸபர் 9ம் தேதி,
19.10.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி மாலை 5:54 வரை;
அதன் பின் ஏகாதசி திதி, அவிட்டம் நட்சத்திரம் நாளை அதிகாலை 4:03 வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூசம்
பொது : முகூர்த்தநாள், விஜயதசமி, அம்பிகையை விஜயாம்பாளாக வழிபடுதல், மகாலட்சுமி வழிபாடு, கொலு எடுக்க நல்லநேரம்: காலை 9:00- 10:30 மணி

மேஷம்: மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர்.

ரிஷபம்: மனதில் சிறுகுழப்பம் ஏற்பட்டு மறையும். நவீன மாற்றத்தால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். பணவரவு சீராகும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் விடாமுயற்சி யால் கிடைக்கும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

மிதுனம்: எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.

கடகம்: சமயோசிதமான செயலால் நன்மை காண்பீ்ர்கள். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

சிம்மம்: உங்கள் வாழ்வில் கூடுதல் வளம்பெற புதிய வாய்ப்பு உருவாகும். தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவர்.

கன்னி: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரம் செழிக்க விடாமுயற்சி தேவைப்படும். பணவரவு மிதமாக இருக்கும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.

துலாம்: பரபரப்புடன் பணியாற்றுவீர்கள். தொழில்,வியாபாரம் சார்ந்த குறைகளை சரிசெய்வ தால், எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும்.சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு பிள்ளைகளின் நற்செயல் ஆறுதல் அளி்கும்.

விருச்சிகம்: மனதில் தெய்வ நம்பிக்கை மேலோங்கும். தொழிலில் தேவையான மூலதனத் துடன் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.உறவினர்க்கு கொடுத்த வாக் குறுதியை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.

தனுசு: உறவினரின் பேச்சால் அதிருப்தி கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படலாம். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். பெண்கள் பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

மகரம்: எதிர்கால வளர்ச்சிநோக்கில் புதிய திட்டம் உருவாக்குவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கும்பம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். அவசர தேவைகளுக்கு சேமிப்பு பணம் கரையும். பணியாளர்கள் பணியை விரைந்து முடிப்பர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை அவசியம்.

மீனம்: தடைகளை முறியடிக்க புதிய உத்திகளை கையாள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறக்கும். லாபம் உயரும். பணியாளர்களுக்கு நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.