இன்றைய நாள் எப்படி 09/10/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 09/10/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 23ம் தேதி, மொகரம் 28ம் தேதி,
9.10.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அமாவாசை திதி காலை 9:48 வரை;
அதன் பின் பிரதமை திதி, அஸ்தம் நட்சத்திரம் மதியம் 1:24 வரை;
அதன்பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூரட்டாதி, உத்திரட்டாதி
பொது : துர்க்கை, முருகன் வழிபாடு.

மேஷம்: எண்ணத்தில் புதுமை நிறைந்திருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமான வகையில் அபிவிருத்தியாகும்.உபரி வருமானம் சேமிப்பாகும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவர்.

ரிஷபம்: சிலரது விமர்சனத்தால் மனத்தளர்ச்சி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். சுமாரான அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளின் செயல்பாடு கண்டு மனம் ஆறுதல் பெறுவீர்கள்.

மிதுனம்: அதிக உழைப்பால் திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும். ஆதாயம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். நண்பரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.

கடகம்: சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து புதிய சாதனை படைப்பீர்கள். லாபம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

சிம்மம்: பெற்றோரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கு கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேறும். லாபம் சீராக இருக்கும். வெளியூர் பயணம் பயன்அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் கணவரின் அன்புக்கு உரியவராவர்.

கன்னி: உறவினரின் அன்பைக் கண்டு பெருமிதம் கொள்வீர்கள். பேச்சு, செயலில் நேர்மை வெளிப்படும். தொழில், வியாபாரம் செழித்து ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர்.

துலாம்: தொடர்பு இல்லாத பணியில் ஈடுபட நேரிடும். தொழில், வியாபாரத்தில் சுமாரான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் உடல்நலத்திற்கு ஒவ்வாதவற்றை தவிர்க்கவும். நண்பரால் உதவி உண்டு.

விருச்சிகம்: சாதனை நிகழ்த்தும் நோக்கில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் செழிக்கும். பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.

தனுசு: புதிய நண்பர்களின் அறிமுகத்தால் நன்மை காண்பீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றி இலக்கை அடையும்.தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி மேற்கொள்வீ்ர்கள். வருமானம் உயரும். சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும்.

மகரம்: உறவினரின் பாசம் கண்டு வியப்படைவீர்கள். தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது.

கும்பம்: சிலரது பேச்சு சங்கடத்தை உருவாக்கும். முக்கிய பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்க வேண்டாம்.

மீனம்: புதிய வாய்ப்புக்களைச் சரியாக பயன்படுத்துவீர்கள். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும்.தாராள பணவரவில் சேமிப்பு கூடும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு