இன்றைய நாள் எப்படி 08/10/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 08/10/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 22ம் தேதி, மொகரம் 27ம் தேதி,
8.10.18 திங்கட்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி காலை 11:20 வரை;
அதன் பின் அமாவாசை திதி, உத்திரம் நட்சத்திரம் மதியம் 2:11 வரை;
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
பொது : மகாளய அமாவாசை, தீர்த்தக்கரைகளில் நீராடி தர்ப்பணம் செய்தல்.

மேஷம்: வேண்டாத நபரால் சிரமத்திற்கு ஆளாகலாம். மன அமைதியை பாதுகாக்கவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பால் ஆதாயம் காண்பீர்கள். பெண்கள் குடும்பநலனில் கவனம் செலுத்துவர். வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படும்.

ரிஷபம்: உங்கள் செயலில் தடுமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரம் செழிக்க அக்கறையுடன் செயல்படுவது நல்லது. மிதமான லாபம் கிடைக்கும். பெண்கள் பயன் தராத பொருட்களை வாஙக வேண்டாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர்.

மிதுனம்: உங்கள் மனதில் உற்சாகம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.

கடகம்: சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பிள்ளைகளின் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்வதை தவிர்க்கவும்.

சிம்மம்: திட்டமிட்ட செயல் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுகப்போட்டி மறையும். தாராள பணவரவால் சேமிப்பு கூடும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு ஏற்படும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்களுக்கு இனிய அனுபவம் உண்டாகும்.

கன்னி: எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமாகலாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேற்றுவது அவசியம். லாபம் சுமார். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் கருத்துவேறுபாடு கொள்வர். பெண்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.

துலாம்: குடும்பத்தினர் உங்களின் கருத்துக்கு மதிப்பளிப்பர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றம் செய்வீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நவீன தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துவர். பெண்கள் விருந்து, விழாவில் பங்கேற்பர்.

விருச்சிகம்: நண்பரிடம் பொழுதுபோக்காக பேசுவீர்கள். மனதில் இருந்த குழப்பம் விலகும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணியில் ஈடுபடுவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: ஒருமுகத் தன்மையுடன் பணியில் மட்டும் ஈடுபடவும். பெண்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் இலக்கு நிறைவேற அவகாசம் தேவைப்படும். மிதமான பணவரவு கிடைக்கும். சொத்து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக் கூடாது.

மகரம்: சிலர் சுயலாபத்திற்காக உதவ முன்வருவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

கும்பம்: சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி எளிதாக நிறைவேறும். லாபம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

மீனம்: பலரும் உங்களிடம் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு வரும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். மனைவியின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு