இன்றைய நாள் எப்படி 06/10/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 06/10/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 20ம் தேதி, மொகரம் 25ம் தேதி,
6.10.18 சனிக்கிழமை, தேய்பிறை, துவாதசி திதி மதியம் 3:15 வரை;
அதன்பின் திரயோதசி திதி, மகம் நட்சத்திரம் மாலை 4:38 வரை;
அதன்பின் பூரம் நட்சத்திரம், அமிர்த–சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : திருவோணம், அவிட்டம்
பொது : சனி மகாபிரதோஷம், நந்தீஸ்வரர், சிவன், சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: சிலரது பேச்சு உங்களை சங்கடப்படுத்தலாம். சொந்தப் பணியில் கவனம் நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதமாகும். நிலுவை பணவரவைப் பெற விடாமுயற்சி செய்வீர்கள். சீரான ஓய்வு ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

ரிஷபம்: திட்டமிட்ட செயலை மறக்கும் சூழ்நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி அதிகரிக்கும்.புதிய இனங்களில் செலவு ஏற்படும். பெற்றோரின் தேவையறிந்து வாங்கித் தருவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் நெருக்கம் வேண்டாம்.

மிதுனம்: முன்னர் நிகழ்ந்த தவறை திருத்திக் கொள்வீர்கள். பலரும் உங்களிடம் அன்பு பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். தாராள பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர் மாணவர்கள் படிப்பில் நல்ல தரத்தேர்ச்சி காண்பர்.

கடகம்: கடந்த கால சிரமம் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வளர்ச்சி ஏற்படும். உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். பெண்கள் ஆடம்பர செலவு செய்வர். மாணவர்களுக்கு படிப்பில் விடாமுயற்சி தேவைப்படும்.

சிம்மம்: சமயோசிதமாக செயல்பட்டு வருவீர்கள். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க அனுகூலம் உண்டாகும். உபரி பணவரவால் சேமிப்பு உயரும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கன்னி: மாறுபட்ட நிகழ்வால் வருத்தத்திற்கு ஆளாவீர்கள். அன்றாட பணிகளில் தாமதம் உருவாகும். தொழில், வியாபாரம் செழிக்க புதிய உத்தியை மேற்கொள்வது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

துலாம்: உதவும் மனப்பான்மையுடன் செயல்படுவீர்கள். சிறிய செயலும் முழு அளவிலான வெற்றியைத் தரும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். உபரி பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு குறித்த பேச்சு நடக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் உள்ள சிரமமான சூழ்நிலை விலகும். மனதில் நிம்மதியும், பெருமிதமும் உண்டாகும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க கூடுதல் பணிபுரிவீர்கள். வருமானம் உயரும். தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: சிலரது பேச்சு சங்கடம் தரலாம். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையளிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற நவீன மாற்றம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

மகரம்: சங்கடமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரலாம். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை சரியாகும். லாபம் படிப்படியாக உயரும். குடும்ப செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் வாங்க வேண்டாம்.

கும்பம்: பேச்சு, செயலில் வசீகரம் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம்: மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும்.பணவரவு சீராகும்.வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.வெளியூர் பயணம் ஏற்படலாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு