இன்றைய நாள் எப்படி 23/09/2018
இன்று!
விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 7ம் தேதி, மொகரம் 12ம் தேதி,
23.9.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி காலை 6:14 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, சதயம் நட்சத்திரம் இரவு 11:09 வரை;
அதன் பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு
பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம்
பொது : சூரியன் வழிபாடு.
மேஷம்: தாயின் ஆசியால் உற்சாகமுடன் செயல்படுவீர்கள். தாமதமான செயல்கள் எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். அதிக பணவரவால் சேமிப்பு கூடும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.
ரிஷபம்: பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியத்தகு அளவில் நன்மை கிடைக்கும். தொழில் வளம் சிறந்து வாழ்க்கைத்தரம் மேம்படும். வருமானம் கூடும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உண்டு. நண்பர்களால் உதவி கிடைக்கும்.
மிதுனம்: பகைவரிடம் விலகியிருப்பது நல்லது. முக்கியமான பணிகளை நிறைவேற்ற மாற்றுவழியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சிறு அளவில் கடன் பெறுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கடகம்: நண்பரின் செயலை குறை சொல்ல வேண்டாம். அதிக உழைப்பால் தொழில் வியாபார நடைமுறையை சீர்படுத்துவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். உணவுப்பொருள் தரமறிந்து உண்ணவும். தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும்.
சிம்மம்: இளமைக் கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதில் புத்துணர்வு பிறக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல்பணி செய்வீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.
கன்னி: வெகுநாள் திட்டமிட்ட பணி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற தேவையான உதவி கிடைக்கும்.தாராள பணவரவு வந்து சேரும். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.
துலாம்: செயல் நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். தொழிலில் இருக்கிற அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. இஷ்ட தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.
விருச்சிகம்: கவனக்குறைவால் மனதில் பதற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை பாதுகாக்கவும். சேமிப்பு பணம் அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். ஒவ்வாத உணவு உண்பதை தவிர்க்கவும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் தரும்.
தனுசு: நண்பரின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். திகைப்பு தந்த பணி எளிதில் நிறைவேறும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க வாய்ப்பு கிடைக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.
மகரம்: யாரிடமும் பொது விஷயம் பேச வேண்டாம். உடல்நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். ஆடம்பரமாக செலவழிப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் சாகச விளையாட்டில் ஈடுபடக் கூடாது.
கும்பம்: நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். அதிக உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். உடல்நலமும் மனவளமும் பெருகும். அரசு வகையில் நன்மை கிடைக்கும்.
மீனம்: நற்பெயருக்கு குறை வராமல் செயல்படவும். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். தவிர்க்க இயலாத வகையில் திடீர்ச்செலவு ஏற்படலாம். வெளியூர் பயணத்தில் மாற்றம் உருவாகும். உறவினர்களால் உதவி கிடைக்கும்.