இன்றைய நாள் எப்படி 20/09/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 20/09/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 4ம் தேதி, மொகரம் 9ம் தேதி,
20.9.18 வியாழக்கிழமை, வளர்பிறை, ஏகாதசி திதி இரவு 2:28 வரை;
அதன் பின் துவாதசி திதி, உத்திராடம் நட்சத்திரம் மதியம் 3:59 வரை;
அதன்பின் திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : திருவாதிரை, புனர்பூசம்
பொது : சர்வ ஏகாதசி, பெருமாள் வழிபாடு.

மேஷம்: எதிரி இடம் மாறிப் போகிற சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு தேவை திருப்திகரமாக நிறைவேறும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும்.

ரிஷபம்: புதியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். இயன்ற அளவில் பிறருக்கு உதவுவீர்கள் .தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். பணவரவு சீராக இருக்கும்.வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.

மிதுனம்: முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது .தொழில், வியாபாரத்தில் நவீன மாற்றம் தேவைப்படும். சுமாரான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். உடல்நலத்திற்கு சீரான ஓய்வு அவசியம்.

கடகம்: முக்கிய செயல் சிறப்பாக நிறைவேறும். தொழில், வியாபார வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும்.

சிம்மம்: திட்டமிட்ட செயல்களை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். கொஞ்சம் அறப்பணி செய்வீர்கள். ஆரோக்கியம் பலம் பெறும்.

கன்னி: குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். .தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உயரும். பணியாளர்கள் செல்வாக்குடன் திகழ்வர். ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். பெண்கள் தாய்வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர்.

துலாம்: பேசுவதில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலங்களை பாதுகாப்பது நல்லது. மிதமான அளவில் பணவரவு இருக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். இஷ்டதெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம்: நண்பரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் இலக்கு எளிதாக நிறைவேறும். பணவரவு அதிகம் கிடைக்கும். குடும்பத்தில் சுபவிஷய பேச்சு நடக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகி செல்வாக்கு மேம்படும்.

தனுசு: முக்கிய செயல் நிறைவேறுவதில் தாமதமாகலாம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பரின் ஆலோசனை உதவும். குறைந்த அளவில் வருமானம் கிடைக்கும். உறவினர் வருகை புரிவர். தியானம், தெய்வ வழிபாடு செய்வதால் நன்மை உண்டாகும்.

மகரம்: சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். குடும்ப பிரச்னையில் சாதகமான தீர்வு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கும்பம்: முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். திடீர் நிர்வாகச்செலவால் சிரமம் ஏற்படலாம். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மீனம்: உங்களிடம் பலரும் அன்பும் நட்பும் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். காணாமல் தேடிய பொருள் அதிர்ஷ்டவசமாக கிடைக்கும்.அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு