இன்றைய நாள் எப்படி 19/09/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 19/09/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 3ம் தேதி, மொகரம் 8ம் தேதி,
19.9.18 புதன்கிழமை, வளர்பிறை, தசமி திதி இரவு 12:28 வரை;
அதன் பின் ஏகாதசி திதி, பூராடம் நட்சத்திரம் மதியம் 1:27 வரை;
அதன் பின் உத்திராடம் நட்சத்திரம், அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : விஷ்ணு வழிபாடு.

மேஷம்: மனதில் குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம்.

ரிஷபம்: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். நண்பரின் உதவியால் நன்மை காண்பீர்கள்.

மிதுனம்: செயலில் நேர்மை அதிகரிக்கும். தொழில், வியாபாரம் அபரிமிதமான வளர்ச்சி பெறும். தாராள பணவரவு கிடைக்கும்.மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும்.

கடகம்: மனதில் புத்துணர்ச்சி மேம்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சியில் முன்னேற்றம் உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

சிம்மம்: இடையூறு செய்பவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை ஏற்படும்.முக்கிய செலவுகளுக்கு சேமிப்பு பணம் பயன்படும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள்.

கன்னி: மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில், வியாபாரத்தில் குறுக்கிடும் இடையூறுகளை சரி செய்வது நல்லது. மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

துலாம்: அனுபவ அறிவால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு கிடைக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு.

விருச்சிகம்: புதிய பொறுப்புகளால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். மனைவியின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும். நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் உண்டாகும்.

தனுசு: அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி எளிதாக நிறைவேறும்.ஆதாயம் கூடும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

மகரம்: உங்களிடம் சிலர் பொறாமையுடன் பேசுவர். தொழில், வியாபார வளர்ச்சிக்கு இதமான அணுகுமுறை உதவும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். தெய்வ வழிபாடு நிம்மதிக்கு வழிவகுக்கும்.

கும்பம்: சவால்களை ஏற்று செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்கு காண்பர். சுப செய்தி வந்து சேரும். பிள்ளைகளின் நற்செயல் பெருமை தேடித் தரும்.

மீனம்: மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு