இன்றைய நாள் எப்படி 18/09/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 18/09/2018

இன்று!

விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 2ம் தேதி, மொகரம் 7ம் தேதி,
18.9.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, நவமி திதி இரவு 10:34 வரை;
அதன் பின் தசமி திதி, மூலம் நட்சத்திரம் காலை 11:06 வரை;
அதன்பின் பூராடம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : துர்க்கை வழிபாடு

மேஷம்: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் இடையூறை சரி செய்வது அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும்.

ரிஷபம்: தகுதி மீறிய செயல்களில் ஈடுபட வேண்டாம். தொழில், வியாபாரம் மந்த கதியில் இயங்கும்.குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும் பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். உணவு விஷயத்தில் கவனம் தேவை.

மிதுனம்: இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

கடகம்: மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை இலக்கை அடையும். கூடுதல் வருமானத்தால் சேமிப்பு கூடும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

சிம்மம்: சிலரது வீண்பேச்சால் சங்கடத்திற்கு ஆளாகலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவர். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கன்னி: பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரம் சீராக இருக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். மிதமான அளவில் பணவரவு கிடைக்கும். இயந்திரப்புpரிவு பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். நண்பரால் உதவி கிடைக்கும்.

துலாம்: பேச்சு, செயலில் உறுதி நிறைந்திருக்கும். கூடுதல் உழைப்பால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

விருச்சிகம்: திட்டமிட்டு செயலாற்றுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். பணவரவு அளவுடன் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அறிமுகம் இல்லாதவரிடம் பேசுவதை தவிர்க்கவும்.

மகரம்: உங்களிடம் உதவி பெற்றவர் நன்றி மறந்து செயல்படுவார். தொழில், வியாபாரம் சீர்பெற கூடுதல் முயற்சி தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம் .வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கும்பம்: முக்கியமான செயல் தடையின்றி நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சலுகை கிடைக்கும். இளமைக்கால நண்பரை சந்திப்பீர்கள்.

மீனம்: அடுத்தவர் வியக்கும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அளப்பரிய நன்மை உருவாகும். பணவரவு திருப்தியளிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.

Radio
×