இன்றைய நாள் எப்படி 14/09/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 14/09/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 29ம் தேதி, மொகரம் 3ம் தேதி,
14.9.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி மாலை 6:36 வரை;
அதன் பின் சஷ்டி திதி, விசாகம் நட்சத்திரம் நாளை காலை 6:01 வரை;
அதன் பின் அனுஷம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

• பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : அசுவினி
பொது : மகாலட்சுமி வழிபாடு.

மேஷம்: சமயோசிதமாக செயல்பட்டு முன்னேறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. லாபம் அதிகரிக்கும். உறவினர் மத்தியில் அன்பும், பாசமும் வளரும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும்.

ரிஷபம்: சமூகத்தில் மதிப்பு உயரும். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் உயரும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர். அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம்.

மிதுனம்: நண்பரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் இருக்கிற அனுகூலத்தை பாதுகாக்கவும். லாபம் சுமார். பெண்கள் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. உணவுக் கட்டுப்பாடு உடல்நலனைப் பாதுகாக்கும்.

கடகம்: திட்டமிட்ட பணியில் திடீர் மாற்றம் ஏற்டலாம். தொழில், வியாபாரம் சார்ந்த குறையை பிறரிடம் சொல்ல வேண்டாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறுவர்.

சிம்மம்: பெரியவர்களின் வழிகாட்டுதலை மதித்து செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் கூடுதல் வளர்ச்சி பெறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். விருந்து, விழாவில் குடும்பத்துடன் பங்கேற்பீர்கள். பணியாளர்களுக்கு நிர்வாகத்தினரின் பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

கன்னி: அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சார்ந்த குறைகளை உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. சேமிப்பு பணம் திடீர் செலவால் கரையும். பிள்ளைகளின் நற்செயலை ஊக்கப்படுத்துவீர்கள்.

துலாம்: அன்பால் பிறரை அரவணைப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். ஆதாயம் உயரும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

விருச்சிகம்: செயலின் விளைவை உணர்ந்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் .சராசரி பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் செலவு செய்ய நேரிடலாம். பிள்ளைகளால் உதவி உண்டு.

தனுசு: சமூகத்தில் உயரிய அந்தஸ்து கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். லாபம் பெருகும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவர்.

மகரம்: மனதில் புத்துணர்வு அதிகரிக்கும். அதிக உழைப்பினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவை குறைவின்றி நிறைவேறும். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

கும்பம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவது அவசியம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். அதிக நிபந்தனைகளுடன் பணக்கடன் பெற வேண்டாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

மீனம்: பேச்சு, செயலில் குளறுபடி ஏற்படலாம். தொடர்பில்லாத பணியை ஏற்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். அரசியல்வாதிகள் சமரசப்பேச்சில் நிதானம் பின்பற்றவும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு