இன்றைய நாள் எப்படி 04/09/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 04/09/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 19ம் தேதி, துல்ஹஜ் 23ம் தேதி,
4.9.18 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை, நவமி திதி மதியம் 2:00 வரை;
அதன் பின் தசமி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை 4:28 வரை;
அதன்பின் திருவாதிரை நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அனுஷம், கேட்டை
பொது : துர்க்கை, முருகன் வழிபாடு.

மேஷம்: மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார தொடர்பு பலம் பெறும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்ப தேவை குறைவின்றி நிறைவேறும். உடல்நிலை திருப்தியளிக்கும். பெண்கள் கணவரின் அன்பு மழையில் நனைவர்.

ரிஷபம்: சிலரது பேச்சு உங்கள் மனதை சங்கடப்படுத்தும். தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பை பயன்படுத்துவீர்கள். லாபம் மிதமாக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். வெளியூர் பயணத்திட்டத்தில் திடீர் மாறுதல் உண்டாகும்.

மிதுனம்: மனதில் அன்பும், கருணையும் நிறைந்திருக்கும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் உயரும். பணியாளர்கள் வாழ்வில் முன்னேற்றம் உண்டு. வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும்.

கடகம்: குடும்பத்தினரின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழில், வியாபார இலக்கு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். வருமானம் சுமாராக இருக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பிற்காக கூடுதல் நேரம் ஒதுக்கவும்.

சிம்மம்: அக்கம் பக்கத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். தாராள பணவரவால் சேமிப்பு கூடும். நண்பருடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

கன்னி: நண்பரின் உதவியால் மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். லாபம் உயரும். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு மகிழ்வர். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் ஏற்படும்.

துலாம்: வீணாக பேசுபவரிடம் விலகுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சீராக இருக்கும். உடல்நலனில் கவனம் தேவை. பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவது நல்லது.

விருச்சிகம்: பேச்சில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் கவனம் தேவை. பெண்கள் சிக்கனமாக செலவு செய்வது நல்லது. உடல்நலத்திற்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.

தனுசு: எதிர்பார்த்த நன்மை எளிதாக கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள்.நிலுவைப் பணம் வசூலாகும்.உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.

மகரம்: நண்பரின் ஆலோசனையால் நன்மை காண்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.மனைவி வழி சார்ந்த உறவினர்களுக்கு உதவுவீர்கள்.

கும்பம்: எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். வீட்டுச் செலவால் சேமிப்பு கரையும். ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.

மீனம்: சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். எதிர்பாராத வகையில் திடீர் செலவு உண்டாகும். நண்பரின் ஆறுதல் பேச்சு நம்பிக்கையை ஏற்படுத்தும். தெய்வ வழிபாடு நன்மையளிக்கும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு