இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்
‘இந்தியன் 2’ படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறது. சூபிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார், கமல். அதாவது, செப்டம்பர் மாத இறுதியில் சூஇந்தியன் 2’ படத்துக்கான படப்பிடிப்பில் இருப்பார், கமல்.
சூஇந்தியன் தாத்தா’ கேரக்டருக்கான காட்சிகளின் படப்பிடிப்பை போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளில் 20 நாள்கள் தொடர்ந்து நடத்தவிருக்கிறார்கள். அங்கே சென்று சூஇந்தியன் 2’ படப்பிடிப்புக்கான லொகேஷன்களைத் தேர்வு செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார், இயக்குநர் ஷங்கர்.
கமலுக்கு வில்லனாக நடிக்க பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய்தேவ்கனை அணுகி இருக்கிறார்கள். நயன்தாரா, கமல்ஹாசன் தவிர பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்துவிட்டார். இப்படத்தின் மூலம், சூகமலுடன் இணைந்து நடிக்கவேண்டும்‘ என்ற நயன்தாராவின் கனவும் நனவாகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருப்பதால், ஆறு மாதங்களுக்கு முன்பே அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்து, கமலுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.