இன்றைய நாள் எப்படி 01/09/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 01/09/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 16ம் தேதி, துல்ஹஜ் 20ம் தேதி,
1.9.18 சனிக்கிழமை, தேய்பிறை, சஷ்டி திதி இரவு 7:09 வரை;
அதன்பின் சப்தமி திதி, பரணி நட்சத்திரம் இரவு 7:26 வரை;
அதன்பின் கார்த்திகை நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30–3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : சித்திரை, சுவாதி
பொது : சனீஸ்வரர் வழிபாடு.

மேஷம்: உற்சாக மனதுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர்ச்சி கூடும் வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். விருந்து விழாவில் பங்கேற்க அழைப்பு வரும்.

ரிஷபம்: முரண்பட்ட எண்ணம் கொண்டவர்களிடம் விலகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாரான அளவில் இருக்கும். திடீர் செலவால் சேமிப்புப் பணம் கரையும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கைத் தரும். தெய்வ வழிபாடு அவசியம்.

மிதுனம்: பிறர் நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரம் வளர புதிய வாய்ப்பு உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும்.

கடகம்: வாழ்க்கைத் தரம் உயர்வு பெற நல்ல வாய்ப்பு வரும். தொழில், வியாபார வளர்ச்சியால் லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் நிர்வாகத்தினரின் நன்மதிப்பை பெறுவர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.

சிம்மம்: பணிச்சுமையால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வது கூடாது. பெண்கள் அதிக பயன் தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கன்னி: முக்கியமான பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம்.தொழில், வியாபாரத்தில் முன்னர் இருந்த குளறுபடி சரியாகும். மிதமான பணவரவு கிடைக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். பிள்ளைகளால் உதவி உண்டு.

துலாம்: தெய்வ அருள் துணை நின்று உதவும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் அபிவிருத்தி ஏற்படும். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். மனைவி விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். சுபசெய்தி வந்து சேரும்.

விருச்சிகம்: நண்பரிடம் குடும்ப விஷயம் பேசுவீர்கள்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அனுகூலம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். ஆரோக்கியம் பலம் பெறும். உறவினர் உதவி செய்வர்.

தனுசு: சூழ்நிலை உணர்ந்து எவரிடமும் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டுச் செலவு அதிகரிக்கும். உணவு விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.

மகரம்: குடும்ப விஷயம் பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரிசெய்வது அவசியம். மிதமான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். பெண்களுக்கு பொறுமை தேவை.

கும்பம்: நண்பர்களிடம் பேசி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான தீர்வு கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மீனம்: பேச்சு, செயலில் படபடப்பு உண்டாகலாம். தொழில், வியாபார இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவை. லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்ல வேண்டாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு