இன்றைய நாள் எப்படி 30/08/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 30/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 14ம் தேதி, துல்ஹஜ் 18ம் தேதி,
30.8.18 வியாழக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தி திதி இரவு 8:41 வரை;
அதன் பின் பஞ்சமி திதி, ரேவதி நட்சத்திரம் இரவு 7:28 வரை;
அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : முகூர்த்தநாள், மகா சங்கடஹர சதுர்த்தி, விநாயகர், தட்சணாமூர்த்தி வழிபாடு.

மேஷம்: சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் பணம், நகை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம்.

ரிஷபம்: செயல்களில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழிலில் குறுக்கிட்ட இடையூறு விலகும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

மிதுனம்: மனம் தெளிந்த நீரோடை போல இருக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். தாராள பணவரவால் சேமிப்பு அதிகரிக்கும். பெண்கள் விரும்பிய பொருள் வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.

கடகம்: பொது இடத்தில் வீண் விவாதம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் தடை குறுக்கிட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் அறிந்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேறுவர்.

சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உருவாகும். லாபம் படிப்படியாக உயரும். பணியாளர்களுக்கு விரும்பிய பணி, இடமாற்றம் வந்து சேரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

கன்னி: நியாய தர்மத்துடன் செயல்படுவீர்கள். தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

துலாம்: சாதுர்யமாக செயல்பட்டு வருவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் இல்ல சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விருச்சிகம்: நன்றி மறந்தவர்களை விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கூடுதல் முயற்சி தெவை. லாபம் சுமாராக இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர்.

தனுசு: விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். திடீ்ர் செலவால் சேமிப்பு பணம் கரையும். உடல்நலனுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படும். குடும்பத்தினரின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.

மகரம்: திட்டமிட்ட பணி இடையூறு இல்லாமல் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகள் நற்செயலில் ஈடுபட்டு பெருமை சேர்ப்பர்.

கும்பம்: மனக்கஷ்டம் தீர தெய்வ வழிபாடு உதவும். தொழில் வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் பணம், நகை இரவல் கொடுக்க வேண்டாம். வீடு, வாகன வகையில் திடீர் செலவு உண்டாகும்.

மீனம்: குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவர். குடும்பத்துடன் விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் உண்டு.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு