இன்றைய நாள் எப்படி 29/08/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 29/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 13ம் தேதி, துல்ஹஜ் 17ம் தேதி,
29.8.18 புதன்கிழமை, தேய்பிறை, திரிதியை திதி இரவு 8:41 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 6:46 வரை;
அதன்பின் ரேவதி நட்சத்திரம், சித்த, -மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : பூரம், உத்திரம்
பொது : முகூர்த்தநாள், பெருமாள், பசு வழிபாடு.

மேஷம்: சொந்த நலனில் அக்கறை கொள்வீ்ர்கள். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவைப்படும். லாபம் சீராக இருக்கும். பிள்ளைகளின் வழியில் செலவு அதிகரிக்கும். பிராணிகளிடம் விலகியிருப்பது நல்லது.

ரிஷபம்: உறவினரால் எதிர்பாராமல் உதவி கிடைக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் அளவில் வளர்ச்சி பெறும். வருமான உயர்வால் கடனை செலுத்துவீர்கள். உடல் ஆரோக்கியம் பலம் பெறும்.

மிதுனம்: பொதுநல சிந்தனையுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை செழித்து வளரும். லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.

கடகம்: திட்டமிட்ட செயல் நிறைவேற தாமதமாகும். நண்பரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிதமான அளவில் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும்.

சிம்மம்: மனதில் குழப்பம் உருவாகலாம். நண்பரிடம் நிதானித்து பேசுவது நல்லது. தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரிடும். பணவரவு கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வாகன போக்குவரத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளால் உதவி உண்டு.

கன்னி: எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்பு கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நிறைவேறும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

துலாம்: வெகுநாள் முயற்சி இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணியில் ஈடுபடுவீர்கள். லாபம் உயரும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் உறவினர்களின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.

விருச்சிகம்: உங்களின் செயல்திறன் கண்டு சிலர் பொறாமைப்படுவர். தொழில், வியாபாரத்தில் குறுக்கீடு வந்தாலும் லாபம் குறையாது. பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்பநலனை உயிர்மூச்சாக கொள்வர். மாணவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

தனுசு: இடையூறு செய்பவரை உணர்ந்து விலகுவீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய உத்திகளைப் பயன்படுத்துவது நல்லது. பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் இருக்கும். பிள்ளைகளால் உதவி உண்டு.

மகரம்: அக்கம்பக்கத்தினரை மதித்து அன்பு பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதாக நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தரத்தேர்ச்சி காண்பர்.

கும்பம்: நட்பின் பெருமையை நிலைநாட்டி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் உழைப்பு அவசியம். அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் போட்டி பந்தயத்தில் ஈடுபட வேண்டாம்.

மீனம்: குடும்பத்தினரின் தேவையறிந்து உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உருவாகும். வருமானம் உயரும். பெண்கள் உறவினர்களுடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவர். பணியாளர்கள் பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவர்.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு