இன்றைய நாள் எப்படி 26/08/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 26/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 10ம் தேதி, துல்ஹஜ் 14ம் தேதி,
26.8.18 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி மாலை 5:35 வரை;
அதன் பின் பிரதமை திதி, அவிட்டம் நட்சத்திரம் மதியம் 1:48 வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மாலை 4:30–6:00 மணி
* எமகண்டம் : மதியம் 12:00–1:30 மணி
* குளிகை : மதியம் 3:00–4:30 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்
பொது : ஆவணி அவிட்டம், பவுர்ணமி விரதம், ஆவணி ஞாயிறு விரதம், மலைக்கோவில் வழிபாடு, மாலை 5:35 மணி வரை கிரிவலம் வருதல்

மேஷம்: அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

ரிஷபம்: நண்பரின் கூடுதல் அன்பு கண்டு மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். குடும்பத்துடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.

மிதுனம்: செயல்களில் மேம்போக்காக ஈடுபடுவீர்கள்.தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிபெற மாற்று உபாயம் உதவும்.அதிக நிபந்தனையுடன் பணக்கடன் பெற வேண்டாம்.தியானம் தெய்வ வழிபாடு செய்வதால் மனதில் நிம்மதி ஏற்படும்.

கடகம்: எதிர்பார்த்த உதவி கிடைக்க தாமதமாகலாம். சாந்த குணத்துடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபார நடைமுறை மந்தகதியில் இயங்கும். லாபம் சுமார். பெண்ள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம்.

சிம்மம்: உங்கள் மனதில் அன்பும், கருணையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். தாயின் தேவையை அறிந்து வாங்கித் தருவீர்கள்.

கன்னி: அன்றாடப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்கள் கணவரின் அன்புக்குரியவராவர்.

துலாம்: சொந்த பணியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க மாற்று உபாயம் பயன்படும்.பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர்.அரசியல்வாதிகள் அரசு உதவி பெற அனுகூலம் உண்டு.

விருச்சிகம்: சந்தோஷ நிகழ்வை நண்பரிடம் சொல்லி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணி நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். பிள்ளைகளின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள்.

தனுசு: மனதில் தைரியம் நிறைந்திருக்கும் .தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். சேமிக்கும் விதத்தில் லாபம் பெருகும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்து, விழாவில் பங்கேற்பர்.

மகரம்: வெளி வட்டார தொடர்பால் தொந்தரவு உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் தேவைப்படும். வெளியூர் பயணத் திட்டத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள். சத்தான உணவும், சீரான ஓய்வும் உடல் நலனை பாதுகாக்க உதவும்.

கும்பம்: உங்களை அவமதித்தவர் கூட அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.

மீனம்: நண்பரின் ஆறுதல் பேச்சு நம்பிக்கை அளிக்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறை உடனடியாக சரி செய்வீர்கள். லாபம் மிதமாக இருக்கும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு