இன்றைய நாள் எப்படி 25/08/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 25/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 9ம் தேதி, துல்ஹஜ் 13ம் தேதி,
25.8.18 சனிக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி மதியம் 3:59 வரை;
அதன் பின் பவுர்ணமி திதி, திருவோணம் நட்சத்திரம் காலை 11:24 வரை;
அதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : காலை 9:00–10:30 மணி
* எமகண்டம் : மதியம் 1:30-3:00 மணி
* குளிகை : காலை 6:00–7:30 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்
பொது : ஓணம் பண்டிகை, சனீஸ்வரர் வழிபாடு, மாலை 4:00 மணி முதல் கிரிவலம்

மேஷம்: பெரியவர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றுவீர்கள். உங்களின் நற்செயல் பாராட்டு பெறும். தொழில் உற்பத்தி விற்பனை செழித்து கூடுதல் பணவரவு கிடைக்கும். இயன்ற அளவில் அறப்பணி செய்வீர்கள்.

ரிஷபம்: உங்களின் இரக்க குணத்தை சிலர் ஏளனம் செய்வர். விடாமுயற்சியால் திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் சராசரி பணவரவு கிடைக்கும். வீடு, வாகன வகையில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.

மிதுனம்: பணி நிறைவேறுவதில் தாமதம் உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தர வேண்டாம். சீரான ஓய்வு உடல்நலத்தை பாதுகாக்க உதவும்.

கடகம்: கருணை நிறைந்த மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருகின்ற இடையூறு இஷ்ட தெய்வ அருளால் விலகும். சராசரி பணவரவுடன் நிலுவைப் பணமும் வசூலாகும். தம்பி தங்கைக்கு உதவி செய்து மகிழ்வீர்கள்.

சிம்மம்: மனதில் சந்தோஷம் நிறைந்திருக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை செழிக்கும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

கன்னி: முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு அவசியம். பணவரவு சராசரி அளவில் இருக்கும். வாகன பராமரிப்பு பயணத்தை எளிதாக்கும். அரசுவகையில் நன்மை காணலாம்.

துலாம்: விரும்பாத விஷயத்தில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் அக்கறை தேவை. லாபம் சுமார். திடீர் செலவால் சேமிப்பு கரையும். பெண்கள் பயணத்தின்போது விழிப்புடன் செயல்படுவது அவசியம்.

விருச்சிகம்: மனதில் இருந்த தயக்கம் விலகும். கடந்த கால உழைப்பால் கூடுதல் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவால் சேமிப்பு கூடும். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

தனுசு: யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். தொழில் வியாபாரம் தாமத கதியில் இயங்கும். ஆதாயம் சுமார். சேமிப்புப் பணம் திடீர் செலவால் கரையும். பணியாளர்கள் பணிச்சுமையால் சிரமப்படுவர். பெண்கள் உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.

மகரம்: எந்த செயலையும் சவாலாக அணுகுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உபரி வருமானம் கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு.

கும்பம்: உறவினருடன் கருத்து வேறுபாடு உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் நிதான அணுகுமுறை நல்லது. பணவரவு பெறுவதில் தாமதம் இருக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்: இஷ்டதெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் லாபம் பெருகும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெற்றோரின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு