இன்றைய நாள் எப்படி 24/08/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 24/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 8ம் தேதி, துல்ஹஜ் 12ம் தேதி,
24.8.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, திரயோதசி திதி மதியம் 2:02 வரை;
அதன் பின் சதுர்த்தசி திதி, உத்திராடம் நட்சத்திரம் காலை 8:53 வரை;
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30– 9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : புனர்பூசம்
பொது : திருவோண விரதம், வரலட்சுமி விரதம், மகாலட்சுமி வழிபாடு.

மேஷம்: நல்லோரின் நட்பு எளிதாக கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும். இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும்.

ரிஷபம்: பொது விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். சேமிப்பு பணம் திடீர் செலவுக்கு பயன்படும். உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்: உங்களை சிலர் குறை சொல்ல நேரிடலாம். தொழிலில் நிலுவைப் பணி படிப்படியாக நிறைவேறும். பணவரவு சுமார். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு பிள்ளைகளின் விஷயத்தில் இதமான அணுகுமுறை தேவை.

கடகம்: சுறுசுறுப்பான செயலால் திட்டமிட்ட பணி நிறைவேறும். தொழில், வியாபாரம் செழித்து உபரி பணவரவு கிடைக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருள் வாங்குவர். இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடந்தேறும்.

சிம்மம்: இஷ்ட தெய்வ அருளால் முக்கிய விஷயத்தில் நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர்.

கன்னி: தடைகளை தாண்டி வாழ்வில் முன்னேறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாரான அளவில் இருக்கும். ஆதாயம் சுமார். உடல்நலனுக்காக மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். பெண்களுக்கு பேச்சில் நிதானம் தேவை.

துலாம்: உங்கள் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாக்கவும். சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். தாயின் தேவையை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்: எந்த செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில்வளர்ச்சி நிலை திருப்திகரமாகும். உபரி பணவரவு கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வளரும்.

தனுசு: உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்வர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக முயற்சி தேவைப்படும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். செலவில் சிக்கனம் வேண்டும்..வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

மகரம்: உறவினர் கூடுதல் அன்பு, பாசமுடன் நடப்பர். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபாரம் செழித்து புதிய சாதனை இலக்கை அடைவீர்கள். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகள் புதிய பதவி பெற அனுகூலம் உண்டு.

கும்பம்: செயல்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். சகோதரவழியில் உதவி உண்டு.

மீனம்: பேச்சு செயலில் வசீகரம் வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் கலையம்சம் நிறைந்த வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு