இன்றைய நாள் எப்படி 20/08/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 20/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆவணி மாதம் 4ம் தேதி, துல்ஹஜ் 8ம் தேதி,
20.8.18 திங்கட்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 7:25 வரை;
அதன் பின் தசமி திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 1:45 வரை;
அதன்பின் மூலம் நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்

* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : கார்த்திகை, ரோகிணி
பொது : சிவன் வழிபாடு.

மேஷம்: முக்கியப் பணியை பிறர் பொறுப்பில் தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிதான நடைமுறை பின்பற்றுவது நல்லது சராசரி அளவில் லாபம் இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மதிக்கவும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம்: நற்செயலில் ஈடுபட்டு புகழ் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். பெற்றோரின் அன்பும், ஆசியும் கிடைக்கும்.

மிதுனம்: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் பன்மடங்கு உயரும். குடும்பத்தினரின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர்.

கடகம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் உருவாகிற போட்டியை சரி செய்ய கூடுதல் முயற்சி தேவைப்படும். லாபம் சுமார். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.

சிம்மம்: எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத் தன்மையை பாதுகாப்பது அவசியம். பணவரவு மிதமான அளவில் இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வேண்டாம்.

கன்னி: பகைவர் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவர்.

துலாம்: எதிர்பார்ப்பு நிறைவேற வாய்ப்புண்டு. நண்பரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரம் செழிக்க நவீன மாற்றம் செய்வீர்கள். வருமானம் திருப்தியளிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும்.

விருச்சிகம்: திட்டமிட்ட பணிகள் நிறைவேற தகுந்த முன்னேற்பாடு செய்வீர்கள்.தொழில் வியாபாரத்தில் லாபம் உயரும். .உபரி வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும்.

தனுசு: மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். தொழில், வியாபாரத்தில் லாபம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் பணி, இடமாற்றம் பெற வாய்ப்புண்டு. பெண்களுக்கு உடல்நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் உதவி கிடைக்கும்.

மகரம்: உங்களின் பேச்சில் ரசனை நிறைந்திருக்கும்.அதிக உழைப்பால் தொழில் வளர்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.

கும்பம்: மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

மீனம்: வாக்குவாதத்தை தவிர்த்தால் மனஅமைதியை பாதுகாக்கலாம். தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்க்கவும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு