இன்றைய நாள் எப்படி 16/08/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 16/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆடி மாதம் 31ம் தேதி, துல்ஹஜ் 4ம் தேதி,
16.8.18 வியாழக்கிழமை, வளர்பிறை, பஞ்சமி திதி காலை 7:19 வரை;
அதன் பின் சஷ்டி திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 9:38 வரை;
அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்த, அமிர்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 10:30–12:00 மணி
* ராகு காலம் : மதியம் 1:30–3:00 மணி
* எமகண்டம் : காலை 6:00–7:30 மணி
* குளிகை : காலை 9:00–10:30 மணி
* சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : சஷ்டி விரதம், முருகன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

மேஷம்: நேர்மை எண்ணத்தை அதிக அளவில் பின்பற்றுவீர்கள். துவங்குகிற பணி தடையின்றி எளிதாக நிறைவேறும். தொழில், வியாபாரம் வியப்பூட்டும் வகையில் வளர்ச்சி பெறும். உபரி பணவரவை தகுந்த சேமிப்பாக மாற்றுவீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்: உங்களின் செயலில் சாமர்த்தியம் நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு எளிதில் நிறைவேறும். சேமிக்கும் வகையில் தாராள பணவரவு உண்டாகும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கைவந்து சேரும்.

மிதுனம்: முக்கிய பணி நிறைவேறுவதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபார நடைமுறையில் முழுஈடுபாடு செலுத்தவும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம்.

கடகம்: சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற அதிகம் பணிபுரிய நேரிடலாம். பணவரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு உண்ணவும்.

சிம்மம்: நண்பரின் உதவி கண்டு பெருமை கொள்வீர்கள். செயலில் புத்துணர்ச்சி வெளிப்படும். தொழில், வியாபாரத்தில் முதலீட்டை அதிகப்படுத்துவீர்கள். நிலுவைப் பணம் கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழலாம்.

கன்னி: அறிமுகம் இல்லாதவரிடம் உதவி கேட்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட தொந்தரவை சந்திக்கலாம். லாபம் மிதமாக இருக்கும். தேவைக்கு மட்டும் செலவு செய்வது நல்லது. இஷ்ட தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும்.

துலாம்: வாழ்வில் இனிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க இஷ்ட தெய்வ அருள்பலம் துணை நிற்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டாரின் தேவையறிந்து உதவுவர். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பர்.

விருச்சிகம்: பணிகளை திறம்பட செய்தால் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் ஆதாயம் சராசரி அளவில் இருக்கும். கூடுதல் முயற்சியால் நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் முக்கிய வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர்.

தனுசு: திறமைகளை வளர்த்து கொள்வீர்கள். நம்பிக்கை இழக்க வைத்த செயல் வெற்றி பெறும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாக இருக்கும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.

மகரம்: அவமதிதவர் அன்பு பாராட்டுகிற நல்ல நிலை உருவாகும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணி நிறைவேறும். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் புத்தாடை, ஆபரணம் பெற நல்யோகம் உண்டு.

கும்பம்: மனதில் இனம்புரியாத குழப்பம் தோன்றலாம். தொழில் வியாபார வகையில் பொறுப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் ஓரளவு கிடைக்கும். அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்கவும். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்.

மீனம்: சிலரது பேச்சால் சங்கடம் வரலாம்.தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். லாபம் சுமார். திடீர் செலவால் சேமிப்பு கரையும். அரசியல்வாதிகள் விவகாரங்களில் இதமான அணுகுமுறை பின்பற்றுவது நல்லது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு