உடல் பசியை தீர்ப்பதும் சேவை தான்; டார்ச்லைட் டிரைலர்!

ஆசிரியர் - Admin
உடல் பசியை தீர்ப்பதும் சேவை தான்; டார்ச்லைட் டிரைலர்!

சதா நடிப்பில் உருவாகியுள்ள டார்ச்லைட் படத்தின் டீசர் சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சதா. ஒரு கட்டத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடிக்கும் நிலை வந்தது. அதன் பிறகு தமிழில் பட வாய்ப்பு இல்லாமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

இந்த நிலையில், தளபதி விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள டார்ச்லைட் படத்தில் சதாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. முழுக்க முழுக்க ஹீரோயின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தில் சதா பாலியல் தொழிலாளியாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து மெட்ராஸ் புகழ் ரித்விகாவும் நடித்துள்ளார். இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

இதில், 1990ம் ஆண்டு நடந்த கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்படுள்ளது. அதோடு, உண்மையின் நிழலை இப்படம் எடுத்துரைக்கிறது. இப்படத்தில் நிறைய ஆபாச வசனங்கள் இடம் பெற்றுள்ளதால், நிச்சயம் இப்படம் வெளியாகுமா என்பது கேள்விக்குறி தான்.

எனினும், வயித்துப் பசிக்கு போக்குவது நல்லது என்றால், உடல் பசி தீர்ப்பதும் சேவை தான். கொடுக்குற ரூ.200க்கு உனக்கு சூடு ஏத்தி, மூடு ஏத்துவாங்களாக்கும், லவ் பண்ணி என்ன பண்ணப்போற, அதான, புரோக்கர் நீங்க சுகமாக வாழ்வதற்காக நாங்க சூடு வாங்கணுமா? குப்பையில் முளைத்தாலும், கறியைவிட காளானுக்கு தான் சுவை அதிகம் போன்ற வசனங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு