இன்றைய நாள் எப்படி 14/08/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 14/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆடி மாதம் 29ம் தேதி, துல்ஹஜ் 2ம் தேதி,
14.8.18 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, திரிதியை திதி காலை 10:03 வரை;
அதன் பின் சதுர்த்தி திதி, உத்திரம் நட்சத்திரம் இரவு 10:23 மணி வரை;
அதன்பின் அஸ்தம் நட்சத்திரம், அமிர்த, சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி
* குளிகை : மதியம் 12:00–1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : சதயம், பூரட்டாதி
பொது : நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம், விநாயகர் வழிபாடு.

மேஷம்: முக்கியமான விஷயத்தில் சுமூகத் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை உருவாகும். உபரி வருமானம் கிடைக்கும். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்த்து படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவர்.

ரிஷபம்: சிரம சூழ்நிலை உணர்ந்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்கள் அதிக விலையுள்ள பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.

மிதுனம்: திட்டமிட்ட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பரின் உதவி ஊக்கம் அளிக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். பணவரவு அத்தியாவசிய செலவுக்கு பயன்படும். வாகன பாதுகாப்பில் கவனம் வேண்டும். நேரத்திற்கு உண்பதால் உடல்நலம் ஆரோக்கியம் பெறும்.

கடகம்: மனதில் உதித்த எண்ணம் செயல் வடிவம் பெறும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் கூடுதல் வருமானம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். உறவினர்களுடன் சந்தோஷ சந்திப்பு ஏற்படும்.

சிம்மம்: பேச்சை குறைத்து பணியில் ஆர்வம் கொள்வது நல்லது. தொழிலில், உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். முக்கிய செலவுக்கு தேவையான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாறுதல் செய்வீர்கள்.

கன்னி: இஷ்ட தெய்வ அருள் பலத்தால் முக்கிய செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபார தொடர்பு பலம் பெறும். தாராள அளவில் பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம்: சிலர் மற்றவரை விமர்சிக்க ஒரு கருவியாக உங்களை பயன்படுத்துவர். தொழில், வியாபார வளர்ச்சி பெற அதிக உழைப்பு தேவைப்படும். சுமாரான அளவில் வருமானம் கிடைக்கும். உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.

விருச்சிகம்: மதிநுட்பத்துடன் பணிகளை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உபரி வருமானம் வரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

தனுசு: திட்டமிட்ட செயல் இனிதாக நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணிபுரிவீர்கள். உற்பத்தி, விற்பனை திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும்.

மகரம்: உறவினர்கள் எதிர்பார்ப்புடன் அணுகுவர். இயன்ற அளவில் மற்றவருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர நவீன மாற்றம் செய்வது அவசியம். சுபச்செலவு அதிகரிக்கும். நேரம் தவறாமல் உண்பதால் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.

கும்பம்: விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெற்றோரின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.

மீனம்: எண்ணம் செயலில் புதிய உத்வேகம் பிறக்கும். தொழில், வியாபார நடைமுறை கடின உழைப்பால் சீர் பெறும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு