SuperTopAds

27 தமிழக மீனவர்களுக்கு 16ம் திகதி வரையில் விளக்கமறியல்..

ஆசிரியர் - Editor I
27 தமிழக மீனவர்களுக்கு 16ம் திகதி வரையில் விளக்கமறியல்..

நெடுந்தீவுக்கு தென் கிழக்கே நேற்று முன்தினம்   இலங்கை கடற்பரப்பிற்குள்  அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்  ஈடுபட்டு கொண்டிருந்த இந்தியாவின் இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 27 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 16ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேசன் உத்தரவிட்டார். 

நெடுந்தீவுக்கு கடற்பரப்பில்   4 படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில்  ஈடுபட்டு இந்திய மீனவர்கள்   27 தமிழக மீனவர்களை கைது செய்த கடற்படையினர்  விசாரனை நடத்தினர் விசாரணையில் வெளிநாடுகளுக்கு  ஏற்றுமதி செய்யப்படும் கூறல் மீன்கள் அதிகளவில் இந்த பகுதி இருந்ததால் அதனை பிடித்து கொண்டிருந்த போது காற்றின் வேகம் காரணமாக எல்லைதாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்த கைது செய்யப்பட்ட மீனவர்களை கடற்படையினர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனையடுத்து நேற்றைய தினம்  விடுமுறை என்பதால் மீனவர்கள் அனைவரும்  ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி சபேசன் இல்லத்தில்  ஆயர்படுத்தினர் வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை எதிர்வரும் 16ந் தேதி வரை விளக்க மறியலில் வைக்க உத்திரவிட்டார்.  

இதனிடையே இலங்கை கடற்படைiயால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய கோரி உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட மீன் துறை உதவி இயக்குநரை சந்தித்து மனு அளித்தனர் மனுவில் இலங்கை கடற்படையால் எல்லை தாண்டியதாக கூறி சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்ட மீனவர்கள்  27 பேரையும் நான்கு நாட்டுப்படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக  விடுவிக்க மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும், என மீனவர்களின் உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

 மேலும் கோரிக்கை மனுவை ஆட்சியர் சார்பாக மீன்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் பெற்றுக்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாக உறவினர்களிடம் உறுதி அளித்தார். கோரிக்கை மனு அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய உறவினர்கள் மீனவர்களையும் படகையும் விடுவிக்கவில்லை எனில் கச்சத்தீவில் குடியேறும் போரட்டம் அல்லது சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு ஆர்பாட்டம்  நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.