விஸ்வரூபம் 2- சினிமா விமர்சனம்
விஸ்வரூபம் 2 இந்திய உளவாளியின் அதிரடி சாகசங்களை பற்றிய படமாக தயாராகி உள்ளது.
2013ம் ஆண்டில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான திரைப்படம் ’விஸ்வரூபம்’. கமல்ஹாசன் இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம்இ இந்திய உளவாளியின் அதிரடி சாகசங்களை பற்றிய படமாக தயாராகியிருந்தது.
தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘விஸ்வரூபம்- 2’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ளார்.
முதல் பாகத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர், ராகுல் போஸ் போன்றோர் விஸ்வரூபம்- 2விலும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பல புதிய கதாபாத்திரங்களும் இந்த படத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக விஸ்வரூபம்- 2வில் கமல்ஹாசனின் தாயார் கதாபாத்திரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. அந்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னாள் கதாநாயகியும் தமிழகத்தை சேர்ந்தவருமான வகீதா ரஹ்மான் நடித்துள்ளார்.
இந்தியாவில் இன்று வெளியாகியுள்ள ’விஸ்வரூபம்- 2’ படம், முன்னதாக மத்திய கிழக்கு பகுதியின் சில நாடுகளில் வெளியானது.