இன்றைய நாள் எப்படி 10/08/2018

ஆசிரியர் - Admin
இன்றைய நாள் எப்படி 10/08/2018

இன்று!

விளம்பி வருடம், ஆடி மாதம் 25ம் தேதி, துல்ஹாதா 27ம் தேதி,
10.8.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, சதுர்த்தசி திதி மாலை 6:47 வரை;
அதன் பின் அமாவாசை திதி, பூசம் நட்சத்திரம் இரவு 3:28 வரை;
அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : பூராடம்
பொது : மகாலட்சுமி வழிபாடு.

மேஷம்: எதிர்மறையான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் சீரான முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

ரிஷபம்: லட்சிய மனதுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி திருப்திகரமாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தினர் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். எதிர்பார்த்த சுபசெய்தி வந்து சேரும்.

மிதுனம்: தொடர்பில்லாத பணியில் ஈடுபட நேரலாம்.குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில் வியாபார நடைமுறை சீராக இருக்கும். பணவரவை சிக்கனமாக பயன்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்திற்கு சிகிச்சை தேவைப்படலாம்.

கடகம்: சுய திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.இஷ்ட தெய்வ வழிபாடு சிறக்கும். தொழில், வியாபாரம் செழிக்கும். வருமானம் உயரும். பிள்ளைகள் முன்னேற்றம் காண்பர். சொத்து வாங்க திட்டமிடுவீர்கள்.

சிம்மம்: சிலர் உங்களுக்கு இடையூறு செய்ய முயற்சிப்பர். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கை அடைய விடாமுயற்சி தேவை. அளவான பணவரவு கிடைக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு செய்வதால் மனதில் அமைதி ஏற்படும்.

கன்னி: குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். மனதில் வெகுநாள் இருந்த சஞ்சலம் தீரும்.தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

துலாம்: உங்களின் தகுதி, திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். செயல்களில் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொளவீர்கள்.

விருச்சிகம்: திட்டமிட்ட புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் பலம் பெறும்.

தனுசு: குடும்பத்தினரின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவது நல்லது. தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். தொழிலுக்காக கடன் வாங்க நேரிடலாம். பெண்கள் அதிக பயன்தராத பொருள் வாங்குவதை தவிர்க்கவும்.

மகரம்: இனிய எண்ணங்களால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில், வியாபார நடைமுறையில் இருந்த இடையூறு விலகும். சேமிக்கும் அளவில் வருமானம் கிடைக்கும். குடும்பத்துடன் விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்: பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். நண்பர் உங்களுக்கு தேவையான உதவியை செயவர். தொழில், வியாபாரம் செழித்து வளர கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் கூடும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.

மீனம்: எதிலும் விடாமுயற்சி தேவைப்படும். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். லாபம் சுமார். உறவினர் வகையில் திடீர் செலவு ஏற்படலாம். தொழிற்சாலை பணியாளர் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு