இன்றைய நாள் எப்படி 30/07/2018
இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 14ம் தேதி, துல்ஹாதா 16ம் தேதி,
30.7.18 திங்கட்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி காலை 6:03 வரை;
அதன் பின் திரிதியைதிதி, அவிட்டம் நட்சத்திரம் காலை 6:34 வரை;
அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்தயோகம்.
* நல்ல நேரம் : காலை 6:00–7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30–9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30–12:00 மணி
* குளிகை : மதியம் 1:30–3:00 மணி
* சூலம் : கிழக்கு
பரிகாரம் : தயிர்
சந்திராஷ்டமம் : ஆயில்யம்
பொது : சிவன் வழிபாடு
மேஷம்: பெற்றோரின் சொல்லுக்கு மரியாதை தருவீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள்.
ரிஷபம்: சுய தேவைகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும். பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.
மிதுனம்: சிறு முயற்சியிலும் பலமடங்கு நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சகோதர வகையில் உதவி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர்.
கடகம்: சமயோசித குணத்துடன் செயல்பட்டு வருவீர்கள். மனதில் நல்லெண்ணம் மேலோங்கும். தொழில், வியாபார வளர்ச்சியால் தாராள பணவரவு கிடைக்கும். அரசு வகையில் நன்மை உண்டு. வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம்.
சிம்மம்: சிலரது பேச்சால் அதிருப்திக்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். அளவான லாபம் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர நோக்கமுடன் செயல்படுவர்.
கன்னி: கடந்த கால உழைப்பின் பயன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் படிப்படியாக உயரும். பெண்கள் பிள்ளைகளின் நலனுக்காகப் பாடுபடுவர். எதிர்பார்த்த நல்ல செய்தி வீடு தேடி வரும்.
துலாம்: புதிய முயற்சியில் ஈடுபட்டு நன்மை காண்பீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் விலகும். லாபம் உயரும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர்.
விருச்சிகம்: எண்ணத்தில் நேர்மை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சியால் நிலுவைப் பணம் வசூலாகும். பெற்றோரின் தேவையறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்து விழாவில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.
தனுசு: பேச்சில் தடுமாற்றம் ஏற்படலாம். நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். லாபம் சுமாராக இருக்கும். உறவினர் வகையில் கவுரவத்திற்காக செலவு செய்ய நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மகரம்: திட்டமிட்டபணி நிறைவேற கூடுதல் முயற்சி தேவை. நண்பரின் ஆலோசனை நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். அரசு சார்ந்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள்.
கும்பம்: உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். எதிரியைக் கூட பெருந்தன்மையுடன் மன்னிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும்.
மீனம்: அறிமுகம் இல்லாதவரிடம் குடும்ப விஷயம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் விடாமுயற்சி தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் வாங்க வேண்டாம். உடல்நலம் சீராக இருக்கும்