பலாலி விமான நிலையத்திற்காக காணி எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு இல்லை..

ஆசிரியர் - Editor I
பலாலி விமான நிலையத்திற்காக காணி எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சுக்கு இல்லை..

பலாலி விமான நிலையம் விஸ்த்தரிப்புக்காக பாது காப்பு அமைச்சு மேலதிக காணிகளை கையேற்ற இ யலாது. அதற்கான உரித்து சிவில் விமான இயக்கி யல் திணைக்களத்திற்கே உள்ளது.

மேற்கண்டவாறு கூறியிருக்கும் வடமாகாண முதல மைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், குறித்த திணைக்க ளத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடித த்தில் கூறப்பட்டுள்ளதாவது.

விமானத்தளத்திற்கான காணி முதலில் 1950ம் ஆண்டு வானூர்தி இயக்கியல் திணைக்களத்தினால் கையேற்கப்பட்டது. 

மொத்தமாக 456 காணித் துண்டுகள் கையேற்கப்பட்டன. அவற்றின் மொத்த விஸ்தீரணம் 349 ஏக்கர் 3 ரூட்ஸ் 35.9 பேர்சர்ஸ் (141.62 ஹெக்டயர்கள்). 

அதனுடைய பூர்வாங்க வரைபட இலக்கம் 1579. அதன் பின் 1986ம் ஆண்டில் காணி கையேற்புச் சட்டத்தின் பிரிவு 2இன் கீழ் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட காணிகளையுஞ் சேர்த்து 

மேலதிக காணிகளை பலாலி விமானத்தள விஸ்தரிப்புக்காக அவசரகாலச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு கையேற்பதாக அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது. 

குறித்த கையேற்பின் கீழ் அடையாளப்படுத்தப்பட்ட காணி 426 ஏக்கர் 00 ரூட் 32.3 பேர்ச்சர்ஸ் (172.4778ஹெக்டயர்கள்) விஸ்தீரணம் கொண்டது. இந்தக் காணி முன்னர் குறிப்பிடப்பட்ட 349 ஏக்கர் 3 ரூட் 35.90 பேர்ச்சர்ஸ் காணியையும் அதனுள் அடக்கியிருந்தது. 

1987ம் ஆண்டில் மேலும் 646 ஏக்கர் 3 ரூட் 24.04 பேர்ச்சர்ஸ் காணி இராணுவத்தால் கையகப்படுத்துவதாக பிரிவு 38(ய) இன் கீழ் அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டது. 

பிரிவு 5இன் கீழான அறிவித்தல் 1999ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது. ஆகவே கையகப்படுத்த கோரப்பட்ட காணிகளின் மொத்த விஸ்தீரணம் 349 ஏக்கர் 3 ரூட்ஸ் 35.90 பேர்ச்சர்ஸ் 10 646 ஏக்கர் 3 ரூட்ஸ் 24 பேர்ச்சர்ஸ்  996 ஏக்கர் 3 ரூட் 19.90 பேர்ச்சர்ஸ்.

இவற்றை விட மேலும் 6500 ஏக்கர் காணி மேலதிகமாக படையினரால் கையேற்கப்பட்டுள்ளன.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் கூட பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் பலாலி விமானத்தள விஸ்தரிப்புக்காக மேலதிகக் காணி கையகப்படுத்த முடியாது.

 ஏனென்றால் அதில் ஒரு பகுதி வானூர்தி இயக்கியல் திணைக்களத்தினால் ஏற்கனவே 1950ல் கையேற்கப்பட்டுவிட்டது. விமானத்தள விஸ்தரிப்புக்கான காணி வானூர்தி இயக்கியல் திணைக்களத்தினால் தான் கையகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். 

இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக மேற்படி பணிப்பாளருக்கு வடமாகாண கௌரவ முதலமைச்சர் அவர்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார் - 

1. மேற்குறிப்பிட்ட 349 ஏக்கர் 3 ரூட் 35.9 பேர்ச்சர்ஸ் காணியை படையினர் உடனேயே வானூர்திகள் இயக்கியல் திணைக்களத்திற்குக் கையளிக்க வேண்டும். 

2. மேலதிகமாக அவசரகாலச் சட்டத்தின் கீழ் விமானத்தளம் அமைப்பதற்காகக் கையேற்கப்பட்ட காணிகளை உடனேயே பணிப்பாளரிடம் கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோர வேண்டியது அவசியம்.

3. குறித்த காணிகள் பணிப்பாளரிடம் கையளித்த பின் இந்திய அரசிடம் இருந்து பலாலி விமானத்தளத்தை அமைப்பதற்குத் தேவையான 

காணி எவ்வளவு என்று அறிந்து அதனைக் கைவசம் வைத்துக் கொண்டு மிகுதிக் காணிகளை காணிச் சொந்தக்காரரிடம் கையளிக்க வேண்டும். 

குறித்த 349 ஏக்கர் 3 ரூட் 35.9 பேர்ச்சர்ஸ் காணிக்கு மேலதிகமாக காணி ஏதும் தேவையாக இருப்பின் அதற்கான கையேற்பு நடவடிக்கைகளைப் புதிதாகத் தொடங்க வேண்டும். 

எனவே மூலக் காணி வானூர்தி இயக்கியல் திணைக்களத்திற்கு உரித்தாகி இருந்தபடியால் மேலதிகக் காணிகள் சம்பந்தமாக நடவடிக்கை 

எடுக்கும் சட்ட உரித்து அந்தத் திணைக்களத்தையே சாரும் என்று பணிப்பாளருக்கு எடுத்துக் காட்டியுள்ளார். 

படையினர் தற்போது கையகப்படுத்தி வைத்திருக்கும் காணி சட்டத்திற்குப் புறம்பாக கையேற்கப்பட்டவையே என்று பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார். 

அண்மையில் கௌரவ பிரதம மந்திரியின் செயலாளர் திரு.சமன் ஏக்கநாயக்கா கௌரவ முதலமைச்சரை யாழ்ப்பாணத்தில் சந்தித்த போது குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அநேக 

விடயங்கள் தமக்கு இதுவரை காலமும் தெரியாது இருந்தது என்பதையும் இப்பொழுது அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவுந் தெரிவித்திருந்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு