நியதிச்சட்டங்கள் எவையும் பேரவை செயலகத்தில் நிலுவையில் இல்லை..
வடமாகாணசபையில் நியதிச்சட்டங்கள் எவையும் நிலுவையில் இல்லை. என கூறியிருக்கும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், இதுவரை வடமாகாணசபையில் 18 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆளுநரினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வடமாகாணசபையின் 128வது அமர்வு இன்று பேரவை செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இ தன்போது மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், மற்றும் ப.அரியரட்ணம் ஆகியோர் பேரவை செயலகத்தில் நியதிச்சட்டங்கள் நிலுவையில் உள்ளனவா?
என கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும்போதே அவைத்தலைவர் மேற்கண் டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 17 நியதிச்ச ட்டங்கள் இதுவரை முறைப்படி ஆளுநரினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
18வது நியதிச்சட்ட மாக வடமாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஒதுக்கீட்டு நியதிச்சட்டத்திற்கு இன்று(நேற்று) காலை ஆளுநர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். மேலும் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள நியதிச்சட்டம்
சிங்கள மொழி பெயர்ப்புடன் பேரவை செயலக சட்ட ஆலோசனையுடன் திருத்தப்பட்டு நியதிச்சட்ட குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் வடமாகாண வியாபார பெயர்கள் நியதிச்சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பபட்டுள்ளது.
மேலும் வடமாகாண விவசாய நியதிச்சட்டம் சட்ட ஆலோசகரின் சிபார்சுக்கு அமைய முதலமைச்சரின் அமைச்சுக்கும், விவசாய அமைச்சுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வட மாகாண நீர்ப்பாசன நியதிச்சட்டம் பேரவை செயலக சட்ட ஆலோசகரின் சிபார்சுடன்
முதலமைச்சரின் அமைச்சுக்கும், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள் ளது. வடமாகாண வாழ்வாதார நிலைய பொருளாதார நியதிச்சட்டம் சிங்கள மொழி பெயர்ப்பு
பேரவை செயலக சட்ட ஆலோசகரின் சிபார்சுடன் முதலமைச்சரின் அமைச்சுக்கு அனுப்பிவை க்கப்பட்டுள்ளது. வடமாகாண வீடமைப்பு அதிகாரசபை நியதிச்சட்டம் பேரவை செயலக சட் ட ஆலோசகரின் சிபார்சுடன் மீள திருத்தத்திற்காக முதலமைச்சரின் அமைச்சுக்கு
அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. வடமாகாண சுற்றாடல் அதிகாரசபை வரைவு பிரதம செயலாளர் ஊடாக அமைச்சர் சபைக்கு சமர்பிக்கப்பட்டு அமைச்சர் சபையிடமிருந்து முதலமைச்சரின் செயலாளர் ஊடாக நியதிச்சட்ட குழுவுக்கு சமர்பிக்கப்பட்டு
நியதிச்சட்ட குழுவில் திருத்தப்பட்டு பேரவைக் கு சமர்பிக்கும்படி கூறப்பட்டு விவசாய அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் வ டமாகாண சமூக சேவைகள் திணைக்கள நியதிச்சட்டம் பேரவை செயலக சட்ட ஆலோசகரின்
சிபார்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எனவே பேரவை செயலகத்தில் எந்தவொரு நியதிச் சட்டமும் நிலுவையில் இல்லை என்றார்.