உயிர் பிரியும் நேரத்திலும் 43 பேரின் உயிரைக் காப்பாற்றிய பஸ் டிரைவர்

ஆசிரியர் - Admin
உயிர் பிரியும் நேரத்திலும் 43 பேரின் உயிரைக் காப்பாற்றிய பஸ் டிரைவர்

இந்தியாவின் கேரளாவில் பஸ் டிரைவரொருவர் உயிர் பிரியும் நேரத்திலும் 43 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பஸ் டிரைவரான மது நேற்றிரவு கோட்டயத்திலிருந்து மலப்புரத்திற்கு 43 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார்.

திடீரென மதுவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், அவர் நெஞ்சைப் பிடித்தவாறு வண்டியைத் தாறுமாறாக ஓட்டினார். உள்ளே பயணித்த பயணிகள் அலறினர்.

இதனையடுத்துச் சுதாகரித்துக் கொண்ட மது உடனே ஹேண்ட் பிரேக்கை பிடித்து பஸ்ஸை நிறுத்தினார். மது ஸ்டியரிங்கில் தலையை சாய்த்தபடி உயிரிழந்து கிடந்தார்.

உயிர் போகும் நிலைமையிலும் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய மதுவின் உடலுக்குப் பலரும் கண்ணீர் மல்கக் அஞ்சலி செலுத்தினர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு