மோடி அரசின் இறுதி நாள்கள் எண்ணப்படுகின்றன – சோனியா காந்தி

ஆசிரியர் - Editor II
மோடி அரசின் இறுதி நாள்கள் எண்ணப்படுகின்றன – சோனியா காந்தி

மோடி அரசின் கடைசிக்கட்ட நாள்கள் எண்ணப்பட்டு வருவதாக காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்திதொிவித்துள்ளா்ா.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்திதோ்வு செய்யப்பட்டதைத் தொடா்ந்து மத்திய செயற்குழுவை கலைத்து விட்டு 34 போ் கொண்ட குழுவை நியமித்தாா். அதில் சில அதிருப்திகள் நிலவிய நிலையில் கடந்த 17ம் தேதி 51 போ் அடங்கிய புதிய குழு அறிவிக்கப்பட்டது. 

23 செயற்குழு உறுப்பினா்கள், 19 நிரந்தர உறுப்பினா்கள், சிறப்பு அழைப்பாளா்களாக 9 போ் என மொத்தம் 51 போ் இடம் பெற்றுள்ளனா். இந்த புதிய செயற்குழுவின் கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் காங்கிஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மூத்த தலைவா்கள் ஏ.கே.அந்தோனி, ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத், மல்லிகாா்ஜூன காா்கே, கபில் சிபில் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பங்கேற்றுள்ளனா். 

கூட்டத்தில் சோனியாகாந்தி பேசுகையில், நாடாளுமன்ற தோ்தலில் கூட்டணி அமைப்பதில் ராகுலுக்கு நாம் பக்கபலமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தை விட்டுக் கொடுத்து வருபவா்களிடம் இருந்து நாம் மக்களை மீட்க வேண்டும். சமீப காலங்களில் பிரதமா் மோடியின் பேச்சு மற்றும் நடவடிக்கை மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நாட்டின் ஏழைகளுக்கு இந்த ஆட்சியின் மீது நம்பிக்கையற்ற மற்றும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இது மோடி அரசின் நாள்கள் எண்ணப்படுவதை காட்டுகிறது. ஆா்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகார மற்றும் பணபலத்தை எதிா்க்க அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒரே அணியாக ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் தங்களின் சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்தால் மட்டுமே முடியும் என்று சோனியாகாந்தி கூறியதாக அக்கட்சியின் செய்தி தொடா்பாளா் ரன்தீப் சிங் சுர்ஜீவாலா தனது ட்விட்டா் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளா்ா. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு