SuperTopAds

அனல் பறக்கப்போகும் லோக்சபா.. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆரம்பம்!

ஆசிரியர் - Editor II
அனல் பறக்கப்போகும் லோக்சபா.. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் ஆரம்பம்!

டெல்லி: காலை 11 மணிக்கு லோக்சபா துவங்கயிலுள்ளது. முதலில் உறுப்பினர்கள் தங்கள் முன்னால் இருந்த பேப்பர்களை சமர்ப்பித்தனர். இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் ஆரம்பித்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜகவுக்கு 3 மணி 33 நிமிடம் ஆளும் பாரதீய ஜனதாவிற்கு 3 மணி 33 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடம் அளிக்கப்பட்டுள்ளது.கட்சிகளின் லோக்சபா பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனல் பறக்கும் விவாதம் ஆரம்பிக்க உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்தார் தெலுங்கு தேசம் எம்.பி ஜெயதேவ் கல்லா விவாதத்தை ஆரம்பித்து வைத்து பேசுகிறார் ஜெயதேவ் கல்லா

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடக்கிறது லோக்சபாவில் இன்று உணவு இடைவேளை கிடையாது

Jul 20, 2018 11:05 AM லோக்சபா அலுவல் துவங்கியது நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் ஆரம்பம் Jul 20, 2018 10:57 AM நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடிப்போம்: அமைச்சர் அனந்த்குமார் உறுதி Jul 20, 2018 10:57 AM வாக்கெடுப்பில், காங். சார்பில் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் உரையாற்ற உள்ளார் Jul 20, 2018 10:44 AM இன்னும் சில நிமிடங்களில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் ஆரம்பம் லோக்சபாவில் அனைத்து கட்சி எம்.பிக்களும் வருகை Jul 20, 2018 10:32 AM நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அதிமுக சார்பில் வேணுகோபால் பேசுகிறார் தமிழக பிரச்சினைகள் குறித்து வேணுகோபால் பேச வாய்ப்பு காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பேச உள்ளதாக அறிவிப்பு நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசுவார் Jul 20, 2018 10:31 AM நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு பாஜக தலைவர் அமித் ஷா நாடாளுமன்றம் வருகை அமித் ஷாவுடன் பாஜக எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை இன்னும் சில நிமிடத்தில் அவை தொடங்க இருக்கிறது

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் உரையாற்ற உள்ளார் அமைச்சர் ராஜ்நாத்சிங் ராஜேந்திர சிங், விரேந்திர சிங், அர்ஜுன் ராம் உள்ளிட்டோர் அரசு தரப்பில் பேச உள்ளனர் Jul 20, 2018 10:17 AM நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்னிட்டு கட்சியினரை சந்திக்க மோடி திட்டம் காலை பாஜக அலுவலகத்தில் எம்.பிக்களை சந்திக்கிறார் மோடி அவையில் பேச வேண்டிய விஷயம் குறித்து விவாதம் Jul 20, 2018 9:41 AM நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் காங். பங்கேற்கவில்லை? மத்திய அரசுக்கு போதிய பெரும்பான்மை உள்ளதால் காங். முடிவு வாக்கெடுப்பு நேரத்தில் வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டம் Jul 20, 2018 9:35 AM நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் 11 மணிக்கு துவக்கம் பாஜக, காங்கிரஸ், திரினமுல் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு விப் உத்தரவு அனைத்து எம்.பிக்களும் லோக்சபாவில் தவறாமல் பங்கேற்க உத்தரவு

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று முக்கியமான நாள் - பிரதமர் மோடி ஆக்கப்பூர்வமாகவும், விரிவாகவும், அமளியின்றி விவாதம் நடைபெறும் என நம்புகிறேன் - மோடி நாடே நம்மை உன்னிப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது - மோடி டிவிட் Jul 20, 2018 7:35 AM மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கீடு ஆளும் பாஜகவுக்கு 3 மணி 33 நிமிடம், காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடம் ஒதுக்கீடு அதிமுகவுக்கு 29 நிமிடம், திரிணாமுல் காங். 27 நிமிடம் ஒதுக்கீடு Jul 20, 2018 7:31 AM மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் லோக்சபாவில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பரபரப்பு Jul 20, 2018 6:16 AM லோக்சபாவில் 12 தொகுதிகள் காலியாக உள்ளதால் தற்போதைய பலம் 532 எம்.பிக்கள் 266 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் 312 ஆக உள்ளது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்கபோவதில்லை என எடப்பாடி பழனிச்சாமி சூசகம்