SuperTopAds

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் அஜித் பட நடிகை!

ஆசிரியர் - Admin
சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் அஜித் பட நடிகை!

அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் கமிட்டான படத்தில் நடித்து வந்தார். இந்த படத்திற்கு பின் சுதா கொங்கரா படத்தில் நடிக்க தொடங்கினார். ஜெயம் ரவி, அதர்வா என பலர் நடிக்கும் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.     

1965ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு அங்கேயும் ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனுடன் நடிகை பாப்ரி கோஷ் 'பராசக்தி' படப்பிடிப்புக்கு பின் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், சிவகார்த்திகேயனுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது, இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாப்ரி கோஷ் பைரவா, விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.