சேலம் அருகே.. 8 வழி சாலை பற்றி மக்களிடம் கருத்து கேட்ட சீமான் திடீர் கைது!

ஆசிரியர் - Editor II
சேலம் அருகே.. 8 வழி சாலை பற்றி மக்களிடம் கருத்து கேட்ட சீமான் திடீர் கைது!

சேலம்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலம் அருகே கைது செய்யப்பட்டார். சென்னை-சேலம் நடுவே அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 8 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து கருத்து கேட்பதற்காக கூமாங்காடு என்ற இடத்திற்கு சீமான் சென்றபோது, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பேசியிருந்தார் சீமான். இதற்காக அவர் மீது ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். எனவே, சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீனுக்கு மனு தாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. சேலத்தில் ஒரு வாரமாக தங்கியுள்ள சீமான், தினமும் காலை 10 மணிக்கு ஓமலூர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில்தான், இன்று பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கூமாங்காடு என்ற இடத்திற்கு சென்ற சீமான், சென்னை-சேலம் 8 வழிச் சாலை திட்டம் குறித்து மக்களிடம் கருத்து கேட்டார். அப்போது திடீரென மல்லூர் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து தனியார் திருமண மண்டபத்தில் சீமான் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியை இதுபோன்ற காரணத்திற்காக காவல்துறை கைது செய்திருந்தது. மக்களை தூண்டும் விதமாக செயல்படுவதாக காவல்துறை குற்றம்சாட்டி பாலபாரதியை கைது செய்திருந்தது. இதேபோன்ற காரணத்திற்காகவே சீமானையும் கைது செய்துள்ளனர் போலீசார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு