SuperTopAds

அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு அவசியம் – ரணில்!

ஆசிரியர் - Admin
அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றுக்கு அவசியம் – ரணில்!

அனுபவம் வாய்ந்த நபர்களை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அனுபவம் வாய்ந்த தலைமைத்துவம் இல்லாமல் இலங்கை மீண்டும் நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய அவர்,

தற்போதைய அரசாங்கத்தில் குறிப்பிடத்தக்க அனுபவமுள்ள உறுப்பினர்கள் இல்லை என்றும், எதிர்கால குழப்பங்களைத் தடுப்பதற்கு அறிவுள்ள தலைவர்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நான் முன்பு பாராளுமன்றத்தில் இருந்தேன், இப்போது எங்கள் குழுவிலிருந்து ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். இவர்கள் மட்டுமே தற்போது நாட்டில் அனுபவம் வாய்ந்தவர்கள்.

தனது குழு மூன்று அல்லது நான்கு வருடங்கள் சேவையாற்றியுள்ளதுடன், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் மூத்த உறுப்பினர்கள் இல்லாதது ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.