பாண்களுக்கு நடுவில் உள்ளாடை: பிரித்தானிய பெண்ணின் அருவருக்கத்தக்க செயல்!

ஆசிரியர் - Admin
பாண்களுக்கு நடுவில் உள்ளாடை: பிரித்தானிய பெண்ணின் அருவருக்கத்தக்க செயல்!

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பிரித்தானிய பெண் ஒருவர் தனது உள்ளாடையை கழற்றி பாண்களுக்கு மத்தியில் வைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் விமர்சனத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வைரலாக இந்த சவால் வீடியோவில் உள்ள பெண் சோல் லோபஸ் (), இவர் ஒரு சோசியல் மீடியா பிரபலம் (English influencer). ஒரு சமூக ஊடக சவாலின் ஒரு பகுதியாக கமேரா முன் இந்த வினோதமான செயலைச் செய்ததாகக் கூறினார்.

வைரலான இந்த வீடியோவில், அவர் பாண் (bread) பிரிவின் முன் நிற்பதைக் காணலாம், அங்கு அவர் தனது உள்ளாடையை கழற்றி பாண்களுக்கு இடையில் தட்டில் வைத்தார்.

அவருக்குப் பின்னால் மற்ற சிலர் இருந்தனர், ஆனால் அவர்கள் கமெராவைப் பார்க்கவில்லை. அவர் செய்த காரியத்தையும் கண்டுகொள்ளவில்லை.

பின்னர் அந்த பெண் கமெராவைப் பார்த்து புன்னகைத்தபடி தனது ட்ராலியை எடுத்துச் சென்றார்.

மெர்கடோனா (Mercadona) சூப்பர் மார்க்கெட்டில் இந்த சம்பவம் நடந்ததாக ஸ்பெயின் செய்தி தளமான லா ரசோன் தெரிவித்துள்ளது.

"மெர்கடோனா இந்த பெண்ணைப் புகாரளித்து, அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைக் கவனிப்பதாகக் காட்டவில்லை என்றால், நான் மீண்டும் மெர்கடோனாவிடமிருந்து பாணை வாங்க மாட்டேன்" என்று பயனர் ஒருவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

"எந்தவொரு சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர் அல்லது ஷாப்பிங் சென்டரிலும் நுழைய அவளை வாழ்நாள் முழுவதும் தடை செய்வேன்" என்று ஒரு பயனர் எழுதினார்.

இந்த பிரித்தானிய பிரபலம் TikTok-இல் வயது வந்தோருக்கான உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்று அறியப்படுகிறார்.

இந்த சம்பவங்கள் குறித்து மெர்கடோனா விசாரித்து வருவதாகவும், அப்பெண்ணின் ஆரோக்கியமற்ற செயலுக்காக அவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு