SuperTopAds

சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை யாழில் விற்பனை செய்த நபருக்கு தண்டம்!

ஆசிரியர் - Editor I
சட்டவிரோதமாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை யாழில் விற்பனை செய்த நபருக்கு தண்டம்!

முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்து , யாழில் உள்ள பல்பொருள் அங்காடிகளுக்கு விற்பனை செய்து வந்த நபர் ஒருவருக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகரினால் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் கடந்த வியாழக்கிழமை (13) வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணையின் போது சந்தேகநபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை எச்சரித்த மன்று , 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.