தாஜ்மகாலில் தொழுகை நடத்த கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மகாலில் வெளியாட்கள் தொழுகை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா பகுதிவாசிகளை தவிர வெளியாட்கள் யாரும் தாஜ் மகாலில் தொழுகை நடத்த கூடாது என ஆக்ரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
இந்த தடையை எதிர்த்து தாஜ் மகால் மஸ்ஜித் மேலாண்மை குழுவை சேர்ந்த சையத் இப்ராகிம் ஹுசைன் சைதி என்பவர் கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்ராவில் வசிப்பவர்களை தவிர மற்ற பகுதியில் இருந்து சுற்றுலா வருபவர்கள் தாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதி அளிக்க மறுத்தனர்.
மேலும், தாஜ் மகால் உலக அதிசங்களில் ஒன்று எனும் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். தொழுகை நடத்த பல்வேறு இடங்கள் உள்ளன என கூறி ஹுசைன் சைதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.-