‘விஜயின் சிகரெட் காட்சி வெட்ககேடானது’ – காறித்துப்பிய பிரபலம்
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. இதற்கு பல்வேறு தரப்புக்களில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
எந்த அளவிற்கு பாராட்டுக்கள் குவிகின்றனவோ அந்த அளவிற்கு எதிர்ப்புகளும் வருக்கின்றன. காரணம் என்னவென்றால் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி தான். மேலும் படத்தின் தலைப்பு ஹிந்தி வார்த்தையாம், இந்த தலைப்பில் ஏற்கனவே ஹிந்தி படமொன்று வந்துள்ளதாம்.
பர்ஸ்ட் லுக் வெளியான சில நிமிடங்களிலேயே ’விஜயின் சிகரெட் காட்சி வெட்ககேடானது’ என்று அன்புமணி ராமதாஸ் தனது கோபத்தை காட்டிவிட்டார். இப்போது முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கே.ராஜன் இயக்குனர் முருகதாஸை காட்டமாக சாடியுள்ளார்.
‘முருகதாஸ் நல்ல இயக்குனர் தான், ஆனால் அவர் ஹிந்தி படங்களை இயக்குவதால் ஹிந்தியில் தலைப்பு வைப்பது தவறு, மேலும் இவ்வாறு செய்வதற்கு வேற தொழில் எதாவது செய்யலாம்’ என திட்டி தீர்த்துள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது