யூனியன் கல்லுாரி விவகாரம் - தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பாணை...

ஆசிரியர் - Editor I
யூனியன் கல்லுாரி விவகாரம் - தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பாணை...

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லுாரியின் இல்ல விளையாட்டு போட்டியில் இடம்பெற்றிருந்த இல்ல அலங்காரம் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. 

பொலிஸார் சட்டத்தை மீறி பாடசாலைக்குள் நுழைந்ததுடன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களை விசாரணைக்கு அழைத்த மைக்காக பொலிஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிகைள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, 

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளார். இதன்படி நாளை 5ம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்கும்படி அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு