முடிந்தது நிச்சயதார்த்தம்! முதல் திருமண முறிவுக்கு பின் இத்தனை பெண்களை காதலித்தாரா சித்தார்த்..

ஆசிரியர் - Editor I
முடிந்தது நிச்சயதார்த்தம்! முதல் திருமண முறிவுக்கு பின் இத்தனை பெண்களை காதலித்தாரா சித்தார்த்..

நடிகர் சித்தார்த்துக்கும், அதிதிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது, இதற்கு முன்பாக நடிகர் சித்தார்த் வாழ்க்கையில் இருந்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

சித்தார்த்- அதிதி திருமணம்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சித்தார்த்.இந்நிலையில், நேற்று நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் தெலுங்கானாவில் உள்ள கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இவர்கள் இருவரும் மகாசமுத்திரம் படத்தின் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர், அவர்கள் பொது இடங்களில் பல முறை ஒன்றாக காணப்பட்டனர். 

ஆனால் அவர்களின் காதலை தெளிவுபடுத்தவில்லை.2003 ஆம் ஆண்டு பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சித்தார்த், இப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றார். 

பாய்ஸ் படம் வெளியான பிறகு சித்தார்த் தனது காதலியான மேகனாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் பின்னர் இந்த ஜோடி இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் சித்தார்த்தும், மேக்னாவும் 2007 ஆம் ஆண்டு சட்டப்படி பிரிந்தனர்.

திருமணம் முறிந்த பிறகு முன்னணி நடிகைகளை காதலித்து வந்தார் சித்தார்த். 

சித்தார்த் காதலித்த நடிகைகள்பாலிவுட் நடிகையும், நடிகர் சைஃப் அலிகானின் சகோதரியுமான சோஹா அலிகானை, சித்தார்த் காதலித்த வந்தார். 

ஆனால் இந்த காதல் நீண்ட காலம் நீடிக்கவில்லை.பின்னர் நடிகை ஸ்ருதி ஹாசனுடன் சித்தார்த் காதலித்து வந்தார். காதலில் விழுந்த உடனேயே, ஸ்ருதியும், சித்தார்த்தும் லிவிங் டுகெதருக்கு மாறினார்கள்.

சித்தார்த்தும், ஸ்ருதியும் சேர்ந்து ஐந்து மாதங்கள் வாழ்ந்தார்கள். சேர்ந்து வாழ்ந்த சில மாதங்களிலேயே அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. 

பிறகு ஸ்ருதி ஹாசன், சித்தார்த்தின் வீட்டை விட்டு வெளியேறினார்.ஸ்ருதியுடன் பிரிந்த பிறகு சித்தார்த்தின் வாழ்க்கையில் சமந்தா நுழைகிறார். 


இரண்டரை வருடங்களாக ஆழமாக காதலித்து வந்தனர். ஆனால் கன்னட நடிகை தீபா சன்னிதியுடன், சித்தார்த் நெருங்கி பழகுவதாக சமந்தாவை நண்பர்கள் எச்சரித்ததால் சமந்தா உறவில் இருந்து விலகினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு