SuperTopAds

அப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது அமெரிக்க அரசு!

ஆசிரியர் - Editor I
அப்பிள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தது அமெரிக்க அரசு!

ஐபோன் வாடிக்கையாளர்கள் ஆண்டிராய்டு செல்போன்களுக்கு மாறுவதை கடினமாக்கியதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக அந்நிறுவனம் மீது அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 

ஐபோனில் இருந்து ஆண்டிராய்டு போன்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது ஏற்படும் சிரமங்கள், மற்ற ஸ்மார்ட் வாட்ச்களை ஐபோன்களுடன் இணைத்து பயன்படுத்துபோது ஏற்படும் சிக்கல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் 

மக்கள் அதிக விலை கொடுத்து ஐபோன்களை வாங்க வேண்டியுள்ளதாக அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது.இதனால், பங்குகள் சரிந்து, ஆப்பிளின் சந்தை மதிப்பு 110 பில்லியன் டாலருக்கு மேல் குறைந்துள்ளது.